உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 'மே தீனம் முண்டு,கட்டையுண்டு கப்பல் கட்ட; பருத்தியுண்டு, பட்டுண்டு துணி நெய்ய; எல்லாம் இருக்கின்றன. ஆனால் முதன்மையான வியாபாரிகள் யாவரும் வட நாட்டாரே. வைரம் வேண்டுமா சுராஜ்மல்லுக்குப் போகவேண்டும். வெள்ளி தங்க நகைகளா! பாபாலால் இருக்கிறது. இரும்புச்சாமான்களா! டாட் டாவை விட்டால் வேறு கதியில்லை, விதியில்லை. பருத்தி ஆடைகளா? தலாவிடம் தஞ்சமடைந்தாவ் தான் தாராளமாய்க் கிடைக்கும். பட்டாடைகளா!. செல்லராமுக்குச் செல்லவேண்டும். சிமிட்டி வேண்டு மானால் டால்மியாவிடம் ஏஜெண்டாக அமரத்தான் வேண்டும். பலசரக்குச் சாமானுக்கோ குப்தாவிடம் கெஞ்ச வேண்டும். மருந்து வகைகளா! தாதாவிடம் தாளம் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கி றோம். முதலாளிகளாக வடநாட்டார் வகையாக அமர்ந்துவிட்டிருக்கின்றனர். நம்மவரெல்லாம் அவ ருடைய தரகர்களாய்த்தான் வாழ்க்கை நடத்த முடி கிறது,நடத்துகின்றனர். அன்னியரை விரட்ட வழி என்றும், தாரக மந்திரம் என்றும் தகடுதத்தம் செய்து. கதரைப் பரப்பிய மகாத்மா, மனமார கதர் இயக்கம் வளரப் பாடுபடவில்லை. எப்படி? உண்மையாகவே அவர் அவ்விதம் எண்ணியிருந்தால், கதர் இயக்கம் மிகவும் வளர்ச்சியுற்று நாடெங்கும் பரவியிருக்கும். ஆனால், நிலைமை மாறி மில்கள் வடநாட்டில் மிகப் பெருத்து விட்டன. சுதர் இயக்கம் வளர்ந்திருந்து மக்கள் சுதர்