பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 மைக்கேல் காலின்ஸ்

ஜனங்கள், அதிகாரிகள் முதலியோரிடையே ஐரிஷ் சுதந்திரத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினர். அவருடைய பிடிவாதத்தை எவரும் மாற்றுவது அரிது. எனவே காலின்ஸ், அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்னுல் ஒருமுறை அயர்லாந்துக்கு வந்துதான் செல்லவேண்டும் என்றும், இல்லாவிட்டால் சிறையிலிருந்து அவரும் நண்பர்களும் வெளிவந்த பெருமை பயனற்றதாகும் என்றும் கூறினன். கதால் புருகாவும் இங்கிலாந்து சென்று, டிவேலராவைக் கண்டு எல்லா விஷயங்களேயும் விளக்கிக் கூறினன். முடிவில் டிவேலராவும் தாய்நாடு திரும்ப இசைந்தார்.

மார்ச்மீ" 24-ந்தேதி அயர்லாந்தின் பழம் பெருங் தேசபக்தனுன ராபர்ட் எம்மெட்டின் திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று டப்ளினில் மான்ஷன் மாளிகையில் சங்கீதக் கச்சேரியுடன் பிரக்கியாதி பெற்ற ஒரு தேசபக்தருடைய பிரசங்கமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெருங் திரளான ஜனங்கள் கூடியிருந்தனர். அவர்கள் யாவரும் புதிய பிரசங்கி யார் என்பதைப் பற்றி வியப்புற்றனர். திடீரென்று ஜனங்கள் கூடி யிருந்த மாளிகையின் கதவுகள் அடைக்கப்பட்டன. ஒர் ஐரிஷ் வாலிபன் மேடையின் மீது தோன்றின்ை. அவன் யார் டிவேலராவுடன் லிங்கன் சிறையிலிருந்து தப்பி ய்ோடிய எtன் மகாரியே அவன். அவன் சொற் பொழிவு யாவர் உள்ளத்தையும் உருக்கிவிட்டது. பிரசங்க முடிவில் அவன் மாயமாய் மறைந்து சென்றன். வெளியே காத்து கின்ற ஒற்றர் திருக்கூட்டம் எவன் சொற்பொழிவாற்றினன் என்பதை அறிந்துகொள்ள