பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 107" ஸ்தலத்தில் ஆஜராகவேண்டி யிருந்ததால் அங்கு செல்லாமலே மறைந்துகொண்டான். அது முதல் சமா தான காலம்வரை அவன் மறைந்து வாழ நேர்ந்தது. ஏப்ரல்மீ 8-ம் தேதி ஸின் பீன் விசேஷ மகாநாடு ஒன்று மான்ஷன் மாளிகையில் கூடுகையில், அவன் போலீஸ் ஒற்றர்களுக்குத் தெரியாமல் அங்கு சென்ருன். எந்த" இடத்திற்குச் செல்வது மிகுந்த அபாயமோ அவ்விடத் திற்கு அவசியமாகப் போவது அவன் வழக்கம். மகா நாட்டில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஐரிஷ் போலிஸாரைச் சமூக பகிஷ்காரஞ் செய்ய வேண்டும் என்பது. மறுநாள் டெயில் ஐரான் கூட்டம் நடைபெறும் போதும் காலின்ஸ் ஆஜராயிருந்தான். அவன் மான்ஷன் மாளிகையில் செல் வதை ஒரு ஒற்றன் கண்டுகொண்டு மிக விரைவாகச் சென்று டப்ளின் மாளிகையில் தகவல் கொடுத்தான். காலின்ஸைக் கைதிசெய்வதற்குப் பல பட்டாளங்கள்' மோட்டார் வாகனங்களில் அனுப்பப்பட்டன. இடையில் காலின்ஸ் தன் தோழர்களுடன் உணவு உண்பதற்காக உட்கார்ந்துகொண்டிருந்தான். திடீரென்று டெலிபோன் மணி அடித்தது. பீஸ்லெய் டெலிபோனில் செவிகொடுத் துக் கேட்கையில், டப்ளின் மாளிகையிலிருந்து காலின்ஸின் தோழனை பிராய் என்னும் ஒற்றன், பட்டா ளங்கள் மான்ஷன் மாளிகைக்குப் புறப்பட்டு வரும் செய்தியைக் கூறினன். காலின்ஸ்-ம் மூன்று நண்பர் களும், அதிக அவசரமில்லாமல் போஜனத்தை முடித்துக்கொண்டு, பட்டாளங்கள் வருவதற்குச் சிறிது முன்னரே சைக்கிள்களேத் துணையாகக் கொண்டு கம்பியை நீட்டினர். இச்செய்தி டப்ளின் மாளிகைக்கு எட்டவே பட்டாளங்கள் வராமலே யொழிந்தன.