பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மைக்கேல் காலின்ஸ் கள்ள அறைகள் அமைக்கப்பட்டன. கட்டிடத்திற்குள் போலீஸார் பிரவேசித்தால், உடனே மேல் மாடியில் வேலை செய்யும் காலின்ஸ் அதை அறிந்துகொள்வதற்கு ஒரு மின்சார மணி அமைக்கப்பட்டது. அவன் அங்கி ருந்து தப்பியோடவும் வழிகள் செய்யப்பட்டிருந்தன. தேசியக் கடன் கிதியைப்பற்றிப் பத்திரிகைகள் மிகவும் விளம்பரப்படுத்தின. அயர்லாந்தின் வர்த்தகத் தைப் பெருக்குவதற்கு வெளிநாடுகளுக்குப் பிரதிநிதி களே அனுப்பவும், கைத்தொழில்கள் விவசாயம் முதலிய வற்றை வளர்க்கவும், பஞ்சாயத்துகள் நியமிக்கவும், தேசிய நாணயச்சாலை அமைக்கவும், மற்றும் தேசிய கிர்மாண வேலைகளைச் செய்யவும் அங்கிதி உபயோகிக்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறே நடத்து வதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கடன் விளம்பரங்களே வெளியிடும் பத்திரிகைகள் டெயில் ஜராஜனப்பற்றிக் குறிப்பிடாமல், தேசியப் பிரதிநிதிகள்' வசூலிப்பதாகவே எழுதி வந்தன. இதல்ை அரசாங் கத்தின் அடக்குமுறைக்குத் தப்பிவிடலாம் என்பது அவைகளின் கருத்து. ஆனல் சர்க்கார் அப்பத்திரிகை கள் யாவற்றையும் அடக்கி வாய்ப்பூட்டிட்டது.சில பத்திரி .காலயங்களில் அச்சு யந்திரங்களும் உலேக்கப்பட்டன. பல பத்திரிகைகள் ஏககாலத்தில் அடக்கப்பட்டுப் போன தால், அடக்குமுறையே கடன் கிதிக்கு விசேஷ விளம் பரமாகிவிட்டது. அரசாங்கம் அங்கிதிக்குப் பணம் உதவு வது சட்ட விரோதம் என்று உத்தரவிட்டது. ஆயினும், கொடிய அடக்குமுறையின் நடுவேயும், காலின்ஸ் ஏராள மாக நிதி வசூலித்து வந்தான். 1920, ஜூலையில் வசூலை நிறுத்தியபோது மொத்தம் 5,79,000 பவுன் கிதி சேர்க் திருந்தது.