பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மைக்கேல் காலின்ஸ் மன்ஸ் ஜர்னல் என்னும் பத்திரிகையில் அவதுாருக ஒரு கடிதம் எழுதின்ை. அக்கடிதம் பொய் மலிந்து விளங்கியது. அவன் போலீஸ்ாரை எவ்வளவு கண்டித்த போதிலும், உண்மையில் காலின்ஸ் வகித்து வந்த முக்கியமான ஸ்தானத்தையும் அவனேக் கைதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கத்துக்கு அறி வித்து வந்தவன் அவனேயாவன். - | -- ங் முக்கியமான தொண்டர் படைத் தலைவர்களேப் பிடித்துக் கொடுக்காவிடில் டப்ளின் மாளிகையிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதைக் குயின் லிஸ்க் உணர்ந்தான். 1920-ம் வருஷம் பெப்ரவரி மாத ஆரம் பத்தில் அவன் காலின்ஸை எப்படியாவது பிடித்துக் கொடுத்துப் பரிசு பெறவேண்டும் என்று துணிந்தான். அவன் காலின்ஸ்-க்கு வேண்டிய நண்பர்களே யெல்லாம் கண்டு, தான் அவனிடம் நேரில் சொல்லவேண்டிய மிக ரகசியமான விஷயம் இருப்பதாய்க் கூறி, அவன் இருப் பிடத்தை விசாரித்தான். ஈமன் பிளெமிங் என்னும் நண் பன் ஒருவன் காலின்ஸைக் கண்டு அவனேக் குயின் லிஸ்க் பார்க்க விரும்புவதாக அறிவித்தான். காலின்ஸ் குயின் லிஸ்கைப்பற்றித் தனக்குள்ள சந்தேகத்தை நிவர்த்தித்துக் கொள்ள விரும்பினன். அவனேச் சோதிக்க எண்ணினன். அவன் தான் கார்க் நகரில், விந்திராப் தெரு, ரென் விடுதியில் தங்குவதாகப் பிளெமிங் மூலம் குயின் லிஸ்குக்குச் செய்தி அனுப்பின்ை. மறுநாள் காலையில், டப்ளின் மாளிகையிலிருந்து கார்க் நகரிலுள்ள ஜில்லா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு தந்தி பறந்தது. காலின்ஸ் அதை வழிமறித்துப் படித்துப் பார்த்துவிட்டு அனுப்பின்ை. அத்தந்தியில்