பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மைக்கேல் காலின்ஸ் போகும் பொழுது இடையில் வழி மறித்து அவனே விடுவிப்பதற்காகச் சில தொண்டர்களே அனுப்பி வைத்தான். தொண்டர்கள் குறித்த இடத்தில் சென்று காத்திருந்தனர். அங்கு ஒரு ராணுவ மோட்டார் வந்தது. அவர்கள் அதை வழி மறித்தனர். அதிலிருந்த ராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும் கைகளை உயரே துர்க்கிச் சரணடைந்தனர். ஆல்ை மோட்டாரில் பார்ட்டன் இல்லை ; கைதி செய்யப்பட்ட ஒர் ஆங்கில சிப்பாய் மட்டுமே அதில் இருந்தான். தொண்டர்கள் ஏமாற்ற மடைந்து திரும்பினர். அதிகாரிகள் பார்ட்டனே இங்கி லாந்திலுள்ள போர்ட்லாந்து சிறைக்கு அனுப்பிவிட்டனர். இதன் பின் மீண்டும் அரசாங்கம் பெருவாரியாய்க் கைதி செய்யும் முறையை ஆரம்பித்தது. வழக்கம் போல் காலின்ஸ் நண்பர்களுக்கு எச்சரிக்கை அனுப்பின்ை. கைதி செய்யக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் லியாம் டோபினும் ஒருவன். அவன் பட்டாளத்தார் கையில் சிக்காமல் தப்பிவிட்டான். ஆனல் அவன் வீட்டில் தற்செயலாய் வந்து தங்கியிருந்த வில்லியம் டோயின் என்ப வனப் பட்டாளத்தார் கைதி செய்துகொண்டு போயினர். வில்லியத்திற்கும் தொண்டர் படைக்கும் சம்பந்தமே யில்லை. பட்டாளத்தார் தவருகவே அவனைப் பிடித் தனர். ஒரு பாவமும் அறியாத அவனேப் பலநாள் சிறையில் வைத்திருந்து, பின் விடுதலை செய்தனர். பெப்ரவரி மாதம் 19-ம் தேதி, தொண்டர்கள் வெடி மருந்துக்காக ஐரிஷ் ஸ்டீம் பாக்கெட் கம்பெனியைச் சோதனை போட்டனர். அவர்கள் எண்ணியபடி வெற்றி உண்டாகவில்லை. அங்கிருந்து காலேயில் திரும்பிச் சென்ற தொண்டர்கள் இருவரை வழியில் போலீஸார்