பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 153 கவனித்தால், சேர்ந்த பணம் குறைவாகவே தோன்றும். ஆயினும், அரசாங்க இடையூறுகள் பணம் சேர்ப்பதை மிகக் கடினமாக்கின. தொண்டர்களே மோட்டார் வண்டி களில் ஏற்றக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. அவர்களேத் தினந்தோறும் பன்முறை நடுத் தெருக் களில் நிறுத்திச் சோதனே செய்தனர். இங்கிலேயில் பணத்தையும், கடன் அறிக்கைகளேயும், கணக்குகளேயும் ஒரிடத்திலிருந்து மற்ருே ரிடத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இத்தனே கஷ்டங்களிடையே சொற்பப் பணம் சேர்வதே பாக்கியமாகக் கருதப்பட்டது. ஜனவரி முடிவில் அரசாங்கம் வழக்கம்போல் ஸின் பின் முக்கியஸ்தர் யாவரையும் ஒரே யடியாகக் கைதி செய்ய ஏற்பாடு செய்தது. காலின்ஸ் அரசாங்க நட வடிக்கைகளே முன்கூட்டியே தக்க காலத்தில் அறிந்து கொண்டதால் தொண்டர்களே எச்சரிக்கையா யிருக்கும் படி செய்திகள் அனுப்பிவந்தான். ஆல்ை, அவன் அனுப்பிய செய்திகள் சிலருக்குக் குறித்த காலத்தில் கிடைக்காமற் போனதால், அவர்கள் மட்டும் கைதி செய் பப்பட்டார்கள். ஆயினும், பல நூற்றுவரைக் கைதி செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்த அரசாங்கம், மொத்தம் 58-பேரையே கைதி செய்ய முடிந்தது. கைதியானவர்களில் ராபர்ட் பார்ட்டன், ஜோ மக்ராத் என் பவர்கள் முக்கியமானவர்கள். பார்ட்டன் காலின்ஸ்-க்கு மிக்க உதவியா யிருந்த வன். அவன் பிரிவால் வேலைக்கு மிகுந்த இடையூறு ஏற்படும் என்று கண்டு, காலின்ஸ் அவனே மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்தான். பார்ட்டனேப் போலீஸ் தாணுவிலிருந்து மெளண்ட்ஜாய் சிறைக்குக் கொண்டு