பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 மைக்கேல் காலின்ஸ் பவை. நரகலோகத்தின் பேய்ச் சக்திகளே ஒருங்கே அவிழ்த்து விடுவதுபோல, ஆங்கில அரசாங்கம் அவர் களே அயர்லாந்தின்மேல் அவிழ்த்து விட்டுவிட்டது. அரசாங்கம், தன் ஒற்றர்கள், போலீஸார், சிப்பாய் கள் முதலிய துணைக் கருவிகளால் தேசிய எழுச்சியை அழித்துவிடுவதற்கு எத்தனேயோ முயற்சிகள் செய்து பார்த்தும், இதுவரை பயனில்லே. அதனுடைய உளவு இலாகாவையே தொண்டர்கள் தகர்த்துவிட்டனர். போலீ லார், உடையும் ஆயுதமும் தாங்கி, தனியே வெளிவர அஞ்சினர். சிப்பாய்களும் தொண்டர்களே முறியடிக்க முடியாமல் விழித்தனர். இங்கிலயில்தான் ஆங்கில அர சாங்கம் இங்கிலாந்திலிருந்து புதிதாகக் கறுப்புக் கபிலரை அனுப்பியது. அப்படையினர் பெரும்பாலும் குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்ட வகுப்புக்களி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிற் பலர் இங்கிலாந்தில் தங்கள் ஊர்களில் கேட்கச் சகிக்காத கொடும் பாதகங்களைச் செய்து தண்ட்னே அடைந்தவர் கள். அவர்கள்தான் அயர்லாந்தில் ஆங்கிலச் சட்டத்தை யும் அமைதியையும் பாதுகாப்பதற்காகத் தாங்கள் அடைபட்டிருந்த சிறைக்கோட்டங்களிலிருந்து வெளியே விடப்பட்டார்கள். நீசத் தொழிலுக்காக நியமிக்கப்பட்ட சேர்களே அவர்கள். சத்தியம், தயை, தாட்சண்யம், கெளரவம் முதலிய ஒழுக்கம் எதுவுமே இல்லாதவர்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவர் பணத்தையும் சாமான்களேயும் மற்றவர் திருடிக்கொள்வது வழக்கம். பழைய போலீஸாரில் எஞ்சி கின்றவர்கள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதுகூடக் கேவலம் என்று எண்ணி ஞர்கள். இத்தகைய மாக்கள்தான் ஸர் ஹமார் கிரீன் வுட்டின் உதவியாட்களாக விளங்கினர்கள்.