பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக்கபிலர் 185 இவ்வேளேயிலே, லாயிட் ஜார்ஜ், அயர்லாந்தின் பொது ஜனப் பாதுகாப்புக்காகவே அவர்கள் அங்கு சென்றி. ருப்பதாக உலகிற்கு அறிவித்தார் ! இந்தப் பாதுகாப் புப் போதும், போதும் ! என்று அயர்லாந்து கூவியது. தன் இளைஞர்களே நூற்றுக் கணக்கில் பலி கொடுத்தது. ஆல்ை பிரிட்டிஷ் பிடி முற்றிலும் தளர்ந்தபாடில்லை. அறப்போகும் பிரி .மு.ஆறுகுவதுபோலும், அணேயப் போகும் தி கொழுந்துவிட்டு எரிவது போலும், அரசாங்கம் தங்கு தடையில்லாத தண்டப் பிரயோகத் தில் இறங்கி வந்தது. பட்டாளங்களுக்கும் கறுப்புக் கபிலருக்கும் அதிக மான அதிகாரம் கொடுப்பதற்காக ஸர் ஹமார் கிரீன் வுட் காமன்ஸ் சபையில் ஒரு புதிய மசோதாவைக் கொண்டுவந்தார். சுடப்பட்டோ தாக்கப்பட்டோ இறந்த வர்களுடைய பிரேதங்களேக் குறித்து மரண விசாரணை செய்வதையும் நிறுத்திவிட வேண்டும் என்பதே அந்த மசோதாவின் முக்கியாம்சம். இதுவரை எத்தனேயோ மரண விசாரணைகளில், விசாரணை சபையார், பல மரணங் கள் போலீஸாராலும் பட்டாளங்களாலும் வேண்டு மென்றே செய்யப்பட்ட கொலைகள் என்று கூறியிருந் தனர். இது சர்க்காருக்குப் பிடிக்கவில்லை. அதல்ை தான் புதிய மசோதா அவசரமாக கிறைவேற்றப் பட்டது. பார்லிமெண்டும் அதை அங்கீகரித்துச் சட்ட மாக்கிற்று. இதுவரை மரணங்களை ஜனப் பிரதிநிதி கள் விசாரித்தது போக, புதிய சட்டத்தின்படி, கொலை களேச் செய்தவர்களென்று கருதப்பட்ட பட்டாளத்து அதிகாரிகளே விசாரித்துக்கொள்ள வேண்டும். இம்மசோதாவைக் கொண்டுவந்தவர்களுடைய நோக்கம்