பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 . மைக்கேல் காவின்ஸ் புக்கொள்வது கேவலமா யிருந்தது. ஆங்கிலப் பத்திரி கைகளும் தொண்டர்களுடைய தொகையைப் பெரிய எண்களால் பெருக்கியே வெளியிட்டுவந்தன. இதல்ை, தொண்டர் படை இயற்கையில் தான் அடைந்திருந்த பலத்தைக் காட்டினும் பன்மடங்கு அதிகமாகப் பெம் றிருந்ததாகப் பொது ஜனங்களும் எண்ணினர்கள். தீவிரமான வேலைகளில் ஈடுபடும் பொழுது தொண்டர் களின் எண்ணிக்கை சுமார் முப்பதுக்குமேல் இராது. பல சண்டைகளும் படையெழுச்சிகளும் அதற்கும் குறைந்த தொகையினராலேயே நடத்தப்பட்டன. ஒரு சமயம் கோகேன்பர்ராவுக்கு அருகில் ஒரு ராணுவ மோட்டார் லாறி திடீரென்று ஓடாது நின்றுவிட்டது. பன்னிரண்டு தொண்டர்கள் தற்செயலாக அப்பக்கத்திற்கு வந்தனர். அவர்களேக் கண்டதும் ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள் கைகளே மேலே துரக்கி மன்னிப்பு வேண்டினர். சிப் பாய்களும் ராணுவ அதிகாரிகளும் வைத்திருந்த அப் பாக்கிகளேயும் தோட்டாக்களேயும் தொண்டர்கள் பிடுங் கிக்கொண்டு அவர்களுடைய மோட்டாருக்கு நெருப்பு வைத்து எரித்தனர். பின்னல் நடந்த ராணுவ விசா ரணையில், அன்று சிப்பாய்களுடன் இருந்த கலனல் மில்ஸ், 140, 150 தொண்டர்கள் பலவகைத் துப்பாக்கிகளேத் தாங்கி வந்து தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்தார். உண்மையில் சென்றவர்கள் 12 தொண்டர்களே , அவர்க ளில் சிலரிடத்தில் மட்டுமே ரிவால்வர்கள் இருந்தன. ---- 1920, ஜூலை மாத முடிவில் தேசத்தின் வட பாகத் . - திலுள்ள பெல்பாஸ்ட் போன்ற நகரங்களில் ஆரஞ்சு - ஜனங்கள் கத்தோலிக் தொழிலாளர்களேத் தாக்க ஆரம் பித்தனர். கப்பல் கட்டும் தொழிற்சாலைகளின் தொழி