பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் 193 போலிஸாரும், சிலர் உடை அணிந்தும் சிலர் அணியா மலும், அவ்விடுதிக்குள் சென்று, லிஞ்ச் இருந்த அறையை அடைந்தனர். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு வெளியேறினர். லிஞ்சி குண்டுபட்டு மடிந்து கட்டிலின் மேல் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண் டிருந்தார் ! r இப்படுகொலைக்குக் காரனமானவர்களேக் காலின்ஸ் விரைவாகக் கண்டுபிடித்தான். போலிஸாரும் அதிகாரி களுமே இதற்குக் காரணமானவர் என்பதை அறிந்தான். லிஞ்சைக் கைதி செய்வதற்குப் போலீஸார் செல்லுகை யில், அவர் எதிர்த்துச் சுட்டதால், அவர்களும் சுட வேண்டி யிருந்தது என் அறு அரசாங்கம் முற்றிலும் பொய்யான ஒர் அறிக்கையை வெளியிட்டது. ஆனல் லிஞ்ச் தொண்டருமல்லர், ஆயுதம் எஅதுவும் வைத்திருப் பதும் வழக்கமில்லை. அவர் படுக்கையில் மடிந்து கிடக் கும் பொழுது மேலே போர்த்தியிருந்த போர்வை அப் படியே இருந்தது. அவருடைய அறையில் வேறு எவ் விதமான குண்டுகளும் சுடப்பட்டதாய்க் காணப்பட வில்லை. எனவே, முரசாங்கக் கூற்று முழு அம் பொய் என்பதை ஜனங்கள் எளிதாகத் தெரிந்துகொண்டனர். இக்கொலைக்குக் காரணமாயிருந்த இரு ராணுவ அதிகாரிகள் நவம்பர் 21-ம் தேதி தொண்டர்களிடம் மரண தண்டனே பெற்றனர். கொலேக் கூட்டத்தார் டப்ளின் தொண்டர் படை அதிகாரியான கரோல் என்பவனுடைய வீட்டை நள்ளிரவில் சோதனே யிட்டனர். அவன் விட்டில் இல்லாமையால், அவர்கள் அவனுடைய வயோதிகத் தந்தையைக் கொலே செய்துவிட்டு மறைந்தனர். மை-15