பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் ” 199 == வந்தனர். ஒரு சமயம் டிரம்கொண்டரா பாலத்தில் கின்றுகொண்டிருந்த சிப்பாய்கள் பலரை ஜோ லியனுர்டு, சார்லஸ் டால்டன் என்னும் இரு தொண்டர்களே சுட்டு விரட்டினர். அக்டோபர்மீ" 11-வட இரவு டிரம்கொண்டராவில் கரோலன் என்பவருடைய வீட்டில் சிப்பாய்களுக்கும் இரு தொண்டர்களுக்கும் அரும் போர் கடந்தது. திப்பெரரித் தொண்டர் படைத் தலைவர்களான தான்பிரீனும், எமீன் டிரீஸியும் அவ்விட்டில் இளேப்பாறிக் கொண்டிருந்தனர். அவ்விருவரும் ஸோலோ ஹெட்பக்கில் இரு போலீஸாரைக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். அவர் களேப் பிடிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த ஒற்றர் கள், அவர்கள் கரோலன் விட்டில் தங்கியிருப்பதைப் பட்டாளத்தாருக்கு அறிவித்து, அவர்களே அங்கு அழைத்துச் சென்றனர். பட்டாளத்தார், தான்பிரீனேயும் டிரீஸியையும் அவர்கள் படுக்கையில் துரங்கும் பொழுதே சுட்டுத் தள்ளவேண்டும் என்று, அவ்விட்டைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆல்ை, அவ்விருவரும் திடீரென்று எழுந் திருந்து, எதிரிகளுடன் போராடத் தொடங்கினர். ஒற்றர்களில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இறந்தவர் இருவரும் பல நாட்களாய்ப் பொதுஜனங் களே வதைத்துக் கொடுமை செய்தவர்கள். வெகுநேரப் போராட்டத்திற்குப் பின்னல், டிரீஸி தப்பியோடின்ை. தான் பிரீன், மிகவும் காயப்பட்டு, உதிரம் வழியும் உடம் போடு, மிகுந்த சிரமத்துடன் தப்பின்ை. நள்ளிரவில் நாற்புறமும் குழ்ந்து கின்ற சிப்பாய் களின் கையில் சிக்காது, அவன் வெகுநேரம் அலைந்து திரிந்து, கடைசியில் ஒரு வீட்டை அடைந்தான். அவ்