பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதான முயற்சி %25 கூடியவை. அத்துடன், ஆங்கில அரசாங்கம் தான் செய்யும் கொடுமைகள் வெற்றியை உண்டாக்குவதாக எண்ணி, மேலும் அவற்றைச் செய்யும்படி அாண்டக் கூடியவை என்று தீவிரவாதிகள் வருந்தினர். வெண் ணெய் வரும் சமயத்தில், பிற்போக்காளர் தங்கள் பயத் தாலும் கோழைத்தனத்தாலும் தாழியை உடைத்து விடுவர் போல் தோன்றியது. ஆல்ை, ஸின்பீன் காரிய தரிசியும் மற்ற முக்கியஸ்தர்களும் மேற்சொன்ன அபிப் பிராயங்களில் தங்களுக்கு உடன்பாடில்லே என்பதையும், தனிப்பட்டவர்கள் சுயேச்சையாகக் கூறிய விஷயம் எது வும் தங்களேக் கட்டுப்படுத்தாது என்பதையும் தெளிவாக விளக்கினர். # மிதவாதிகளும், பிற்போக்காளரும், சுயநலமிகளும் சமயத்திற்குத் தக்கபடி நடிக்க முன்வந்ததைக் கண்டு, காலின்ஸ் வெகுண்டு சிறின்ை. பொதுஜனங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டெயில் ஐரானே சமாதான விஷயத்தை முடிவுசெய்ய உரிமையுடையது என்பதை விளக்கி அவன் பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுதி ன்ை. ஆங்கிலேயர் கொடுத்த வாக்குறுதிகளே கிறை வேற்றும்வரை காத்திருங்கள் இடையில் உங்கள் வேலையை நடத்தி வாருங்கள் ! என்பதே அவன் தேசத் தாருக்குக் கூறிய யோசனே. ஆர்ச்பிஷப் குளுன் லண்டனுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் லாயிட் ஜார்ஜைக் கண்டு பேசினர். போனர்லா, ஹமார் கிரீன்வுட், சர்ச்சில், ஆண்டர்ஸன், ஜெனரல் மாக்ரெடி முதலியோரையும் கலந்து பேசினர். அப்பேச்சின் முடிவு என்ன என்பது இரண்டு தினங் களில் வெளியாயிற்று. காமன்ஸ் சபையில் பேசும் மை-15