பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மைக்கேல் காலின்ஸ் சமாதான உடன்படிக்கையின் எல்லா ஷரத்துக்களையும் ஏற்பாடு செய்வதற்கு டெயில் முழுதும் யாதொரு தடையு. மின்றிக் கடடவேண்டும். ஆ.கி.” காலின்ஸ் டாக்டர் குளுனைச் சந்திப்பதல்ை, அதி லிருந்து ஒற்றர்கள் அவனேத் தொடர்ந்து பிடித்துவிடக் கூடும். அங்கிலேயிலும் காலின்ஸ் அஞ்சாது அவரை ஒரு முறை சந்தித்துப் பேசினன். இரு பக்கத்தாரும் பலாத்காரமான செயல்களே நிறுத்தி, டெயில் ஐரான் முழுதும் கூடுவதற்கு அதுமதி தந்து, அதன் அமைதி யான வேலைகளில் தலையிடாமல் இருப்பதானுல்தான் சமாதானப் பேச்சில் இறங்க முடியும் என்பதை அவன் தெளிவாக உரைத்ததோடு, எழுதியும் கொடுத்தான். காலின்ஸ் கெளரவமான சமாதானத்திற்கு முயன்று கொண்டிருக்கும் பொழுது, சில ஐரிஷ்காரர்கள் முன்பின் ஆராயாது பிற்போக்கான எண்ணங்களே வெளியிட்டனர். வலின்பீன் அரசியல் ஸ்தாபனத்தின் உபதலைவர் ஒருவர் லாயிட் ஜார்ஜ-க்கு, அயர்லாந்து சமாதானத்திற்குத் தயாரா யிருப்பதாயும், முதலாவது அவர் என்ன செய்ய எண்ணியிருக்கிருர் என்பதை அறிவிக்கும்படியும் ஒரு தந்தி அனுப்பினர். கால்வே தாலுகா கவுன்சிலின் அங்கத்தினரில் அறுவர் கூடி, தொண்டர்களுடைய வேலைகளேப் பழித்து, சமாதானம் வேண்டும் என்று தீர்மானித்தனர். கால்வே கவுன்ஸிலின் இதர அங்கத் தினர் பலர் சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருந்த பொழுது, வெளியேயுள்ள இப் பேடிகள் சமாதானத்திற்கு அவசரப்பட்டனர். இம்மாதிரிக் காரியங்கள் , பெருங் தியாகங்களேச் செயது களைத்திருந்த ஐரிஷ் மக்களேப் போலிச் சமாதானத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தக்