பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமாதான முயற்சி 231 == றிப் போகும் என்றும் எடுத்துக் கூறினர். பிரதம மக் திரி தாம் டப்ளின் மாளிகையின் கருத்தை அறிவதற்கு அவகாசம் வேண்டும் என் அறு அறிவித்தார். இடையில் குளுன் தமது நாட்டுக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கை யில், பிரதம மந்திரியின் அந்தரங்கக் காரியதரிசி அவர் பயணத்தை ஒத்திவைக்கவேண்டும் என்.அ வேண்டினர். மீண்டும் மந்திரி சபை கூடியது. மந்திரிகள் டாக்டர் குளுனே கழுவவிட்டு விட்டு, வேருெரு வழியில் சமாதான முயற்சி நடப்பதாக அவருக்குக் கூறினர்கள். ஒபில னுகன் என்னும் பாதிரியார் மூலம் அவர்கள் பேச முற் பட்டனர். அப்பாதிரியார், காலின்ஸ் முதலியோர் தடுத்துச் சொல்லியும் கேளாது, ராஜி விவகாரத்தில் தலையிட்டு லண்டன் சென்ருர் காலின்ஸ், அவர் தமக் குத் தாமே பிரதிநிதியே தவிர, வேறு எந்தக் கட்சிக் கும் பிரதிநிதியல்லர் என்று கூறிவிட்டான். டிவேலரா திரும்பிவந்து சேருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளேக் காலின்ஸ் ரகசியமாகச் செய்து முடித் தான். 1920-ம் வருஷம் டிசம்பர் மாதம் 24-ந் தேதி டிவேலரா டப்ளினுக்கு விஜயஞ் செய்தார். அன்அ அவரும் காலின்ஸ்-சம் வெகுநேரம் கலந்து பேசினர். அன்று மாலை காலின்ஸ் பட்டாளத்தார் கையிலிருந்து தப்பியதே பெரும் விந்தையாகும். சமாதானப் பேச்சு ஒரு பக்கம் நடக்கையில், கைதி செய்வதும், சோதனையிடு வதும், சுடுவதும் மறுபக்கம் குன்ரு மல் நடந்து வந்தன. டிஸம்பர் மாதம் 24-ந் தேதி மாலே காலின்ஸ் டோபின், கல்லென் முதலான நண்பர்களோடு கிரிஷாம்’ விடுதியில் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது,