பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம்

19


அவருடைய கண்டிப்பும் தண்டனைகளும் காலின்ஸின் உள்ளத்தில் வெறுப்பை உண்டாக்கவில்லை. அவரிடத்தில் அவனுக்கு அளவற்ற அன்புண்டு.

பள்ளிச் சிறுவர்கள் யாவரும் காலின்ஸை நேசித்துப் பாராட்டி வந்தார்கள். இவ்வாறு, சுற்றிலும் அன்பு வெள்ளத்திலே, காலின்ஸ் படிப்பிலும் விளையாட்டுகளிலும் தேர்ச்சிபெற்றுப் பிரகாசித்து வந்தான். ஒழிந்த நேரத்திலெல்லாம் அவன் வயது முதிர்ந்த பெரியவர்களிடம் சென்று பழம் பெருங் கதைகளைக் கேட்டு ஆனந்திப்பது வழக்கம். பள்ளிப் படிப்பு மட்டும் அவனுடைய வளம் பொருந்திய உள்ளத்திற்குப் போதியதாயில்லை. அவன் தந்தை கல்விக் களஞ்சியமாக விளங்கியதால், வீட்டிலிருந்த குழந்தைகள் யாவரும் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாதாரண நவீனங்களேயன்றி மிகப் பெரிய நூல்களையும் படித்துவந்தார்கள். காலின்ஸ் இளம் பிராயத்தானாயினும், தாமஸ் டேவிஸ் போன்ற பெருந்தலைவர்களின் தேசிய இலக்கியத்தைப் பன்முறை கற்று வந்தான். தாய்த் திருநாட்டிற்காகச் சொல்லொணாத் துயருற்றுப் பெருந் தியாகங்கள் செய்த உல்ப் டோன், எம்மெட் முதலிய வீரர்களைப் பற்றிய பாடல்களைக் கேட்பதில் அவனுக்குப் பிரியம் அதிகம். ஏராளமான ஆங்கில நூல்களையும், இனிய காவியங்களையும், கணித நூல்களையும், சிற்ப நூல்களையும் அவன் படித்து வந்ததுடன், வீரச் சரித்திரங்கள், துப்பறியும் கதைகள் முதலியவற்றையும் சலிப்பின்றிப் படித்துவந்தான்.

அவன் படித்துவந்த நூல்களிலே தேசாபிமானத்தையும் சுதந்திர வெறியையும் ஊட்டக்கூடியவை பல இருந்தன. சின்னஞ் சிறு வயதிலேயே அவன் பல