பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் நிறுத்தம் 245 டிவேலரா-பிரதம மந்திரி, ஆர்தர் கிரிபித்-அங்கிய காட்டு மந்திரி, மைக்கேல் காலின்ஸ்-வரவு செலவு மக் திரி, ராபர்ட் பார்ட்டன்-பொருளாதார மந்திரி, காஸ்கி ரேவ்-ஸ்தல ஸ்தாபன மதிரி, ஆஸ்டின் ஸ்டாக்-உள் காட்டு மந்திரி, கதால் புருகா-பாதுகாப்பு மந்திரி. சமாதான மகாநாட்டிற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத் தின் சார்பாக லாயிட் ஜார்ஜ், ஆஸ்டின் சேம்பர்லேன், லார்டு பர்க் கன்ஹெட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸர் வொர்திங்டன் இவான்ஸ், -ஸர் ஹமார் கிரீன்வுட் ஆகிய அறுவரும் பிரதிநிதிகளாய் நியமிக்கப்பட் டிருப்பதாய் அக்டோபர் மாதம் 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முக்கியமான அரசியலமைப்பு சம் பந்தமான பிரச்னைகளில் ஆலோசனை கூற அட்டர்னி ஜெனரல் ஸர் கார்டன் ஹிவார்ட்டும். மகாகாட்டின் அங்கத் தினராய்க் கருதப்படுவார் என்றும் கூறப்பட்டது. அக்டோபர் மாதம் 8-ந் தேதி ஐரிஷ் பிரதிநிதிகளில் காலின்ஸைத் தவிர மற்றையோர் லண்டனுக்குப் புறப் பட்டுச் சென்றனர். அங்குள்ள ஐரிஷ்காரர்கள் அவர் களேக் குது.ாகலத்துட்ன் வரவேற்றனர். லண்டன் நகரில், ஹான்ஸ் பிளேஸ் என்னுமிடத்தில், அவர்கள் தங்கு வதற்கு டெயில் ஐரான் செலவில் ஒரு பெரிய மாளிகை அமர்த்தப்பட்டது. கடொகன் கார்டன்'ஸில் மற்ருெரு விடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்டோபர் மாதம் 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவுதான் காலின்ஸ் புறப்பட்டான். அவன் பிறருக்குத் தெரியாமலே லண்டனில் இறங்கி நேராக ஹான்ஸ்பினே ஸ்-க்குச் சென்ருன். அவனுக்கு வரவேற்பு முதலிய வைபவங்கள் பிடிக்காததால்தான், இவ்வாறு ரகசிய மாய்ச் சென்ருன். எந்த காட்டின் கொடுங் கோலை