பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்படிக்கை 249 விடப்பட்டது. ஆல்ை, அயர்லாந்துக்கும் ஆங்கில மன் னருக்கும் உரிய சம்பந்தம், வடகிழக்கு அல்ஸ்டருடைய நிலைமை ஆகிய முக்கியமான விஷயங்களே விவாதத்திற் குக் கொண்டுவர நாளாயிற் று. மகாநாட்டின் சப்-கமிட்டிகள் ஒவ்வொன்றிலும் காலின்ஸ் ஸ்தானம் பெற்று அரிய ஊழியம் செய்து வங் தான். ராணுவ விஷயங்களிலும், சிக்கலான பொருளா தார விஷயங்களிலும் அவன் காட்டிய திறமை ஆங்கிலப் பிரதிநிதிகளையும் ஆச்சரியப்படும்படி செய்தது. சிரித் தும், நகைச் சுவை ததும்பும்படியும் பேசிக்கொண்டிருந்த காலின்ஸின் அபாரமான புத்திக் கூர்மையைக் கண்டு பர்க்கன்ஹெட் பிரபு கூட மயங்கிவிட்டார். லண்டன் நகரிலுள்ள ஐரிஷ்காரரே யன்றி ஆங்கி லேயரும் காலின்ஸைக் காண ஆசைகொண்டிருந்தனர். - அவன் பெரிய சதியாலோசனைக்காரன்”, இரத்த வெறி கொண்டு போராடுவோன்’ என்றெல்லாம் அவர் கள் கேள்விப்பட் டிருந்ததால், உண்மையான காலின்ஸை நேரில் வந்து பார்த்து மகிழ்ந்தனர். இதனுல் காலின் வலாக்கு லண்டனில் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். காலின்ஸ் சமாதான மகாநாட்டிலும் சப்-கமிட்டி' களிலும் வேலைசெய்ததோடு, இடையிடையே அயர்லாங் துக்கும் சென்றுவர வேண்டியிருந்தது. அவனுடைய உளவு இலாகாவுக்கும் வரவு செலவு இலாகாவுக்கும் வேண்டிய ஆலோசனைகளைக் கூறவேண்டியிருந்தது. டோபினும் கல்லெனும் அடிக்கடி லண்டனுக்கு வந்து அவனுடன் கலந்து பேசினர். லண்டனில் இருக்கும் பொழுது காலின்ஸ் தனக்குக் கிடைத்த சொற்ப ஒய்வு