பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம்

25


அழைப்பது வழக்கம். பிற்காலத்தில் இப்பெயர் பிரசித்தமாகிவிட்டது.

1910-ஆம் வருஷத்திற்குப்பின் காலின்ஸ் கம்பெனிகளில் வேலைபார்க்கலானான். முதலில் ஹார்னர் கம்பெனியிலும், பின்னர் காரண்டி டிரஸ்ட் கம்பெனியிலும் அமர்ந்தான். இரண்டாவது கம்பெனியில் 1915-ம் ௵ முடிவு வரை வேலை பார்த்தான். அப்பொழுதுதான் சர்வ தேசப் பொருளாதார விஷயங்களைப்பற்றி அறிந்து கொள்ள அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் கம்பெனி நியூயார்க் நகரைச் சேர்ந்தது. அதில் வேலை செய்தவர்களிற் பலர் ஸ்காட்லந்து வாலிபர்கள். காலின்ஸ் அவர்கள் எல்லோருடனும் இனிமையாக நெருங்கிப் பழகிவந்தான். கம்பெனியில் எவ்வளவு வேலையிருந்தாலும் அவன் சலிப்பதில்லை. சிரித்த முகத்துடன் வேலைகளை முடித்துவிடுவான். அவனுடைய அருமைத் தாய்நாட்டை யாராவது பழித்துக் கூறினால் மட்டுமே, முகத்திலுள்ள புன்னகை மறையும், முகம் கடுகடுக்கும். இவ்வுண்மையை அவனுடன் வேலைபார்த்து வந்த ஒருவரே வெளியிட்டிருக்கிறார்.