பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


போர்க் கோலம்

ழுநூறு வருஷ காலமாக இங்கிலாந்து பக்கத்திலிருந்த தன் சகோதரத் தீவான அயர்லாந்தை அடக்கியாள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்துவந்தது. அது அயர்லாந்தைப் பிடித்ததும் ஆண்டதும் உண்மையேயாயினும், அதைப் பூரணமாக அடக்கிவைக்க முடியவில்லை. அயர்லாந்தின் ஆன்மா அடிமைத்தனத்தால் அழுகிப்போகாமல் இருந்தது. அயர்லாந்தைப் பார்த்து, 'நீ அடிமைப்பட்டதால் இழிவடைந்தாய்' என்று நாம் சொன்னல், அது, 'நான் அடிமைப்பட்ட போதிலும், எந்நாளிலும் அதற்கு இசைந்து பணிந்து இருக்கவில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் என் விடுதலைக்காக என் மக்கள் போராடிவந்தார்கள். அதுவே எனக்கு ஆறுதல் !' என்று விடையளிக்கும்.

ஐரோப்பா யுத்தம் ஆரம்பமான காலத்தில், இரண்டரை நூற்றாண்டாக அடிமையாக அல்லலுற்ற அயர்லாந்து, சிறிது தலைதூக்கிப் பார்த்தது. ஒளிமழுங்கிய அதன் கண்களில் சிறிது ஒளி வீசிற்று. அதன் அடிமைத் தளைகளைத் தகர்த்துச் சுதந்திரக் கொடியை நிலை நாட்டத் தொண்டர்படை என்னும் சுதந்திரப் படை தோன்றியது. அப்படை பழைய குடியரசுச் சகோதரத்துவ சங்கத்தின் வழித் தோன்றலாகும். குடியரசுச் சங்கத்தின் அங்கத்தினர் பலர் இளைஞர். அவர்கள்