பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க் கோலம்

31

மெண்டில் நிறைவேற்றி வைத்தார்கள். அம் மசோதாவும் யுத்தத்திற்குப் பிறகே அமுலுக்கு வரவேண்டும் என்று கிபந்தனையும் செய்யப்பட்டது. இவற்றைக் கண்ட ஐரிஷ் தொண்டர்கள் உள்ளம் கொதித்தார்கள். அந்நியர் தம் சந்தைகளில் அயர்லாந்தின் பிறப்புரிமை விலை கூறப்படுவதாக எண்ணினார்கள். ரெட்மண்டு தேசீயத் தொண்டர் படையை இங்கிலாந்துக்கு உதவியாக அனுப்ப இசைந்ததால், அயர்லாந்தின் சுதந்திரப் போருக்காகத் தயாரிக்கப்பட்ட படை தங்களை அடக்கியாளும் அந்நியருக்கு உதவி செய்யப்போவதை எண்ணிப் பதைத்தார்கள். தங்களுடைய ஐரிஷ் தொண்டர் படையைப் பலப்படுத்தினார்கள். அப்படையினர் வெகு விரைவாகத் தங்களுடைய பிரதிநிதிகளைக் கொண்ட மகாநாடு ஒன்றையும் கூட்டினர். அயர்லாந்தின் பாதுகாப்புக்காக நிரந்தரமான ஆயுதம்தாங்கிய தேசீயப் படையை வைத்துக்கொள்ள அதற்குள்ள உரிமையை நிலைநாட்டவும், ஐரிஷ் மகாஜனங்களை ஒரு தேசிய சமூகமாக நிர்மாணிக்கவும், சுயராஜ்ய அரசாங்கம் ஏற்படும் வரை ஐரிஷ்காரர்களைப் பட்டாளத்தில் பலவந்தமாய்க் சேர்ப்பதை எதிர்க்கவும், ஆங்கில ராணுவத்தின் மூலமும் டப்ளின் மாளிகை மூலமும் அயர்லாந்தை ஆள்வதை மாற்றி சுயராஜ்ய ஸ்தாபனம் செய்யவும் அவர்கள் தீர்மானித்து அறிக்கை வெளியிட்டனர். மேலும் ராணுவப் பயிற்சியையும் நிறுத்தாது நடத்தி வந்ததுடன் புதிய தொண்டர்களையும் சேர்த்து வந்தாா்கள்.

1899-ல் போயர் யுத்தம் கடக்கும்பொழுது இங்கிலாந்து ஆப்பிரிகாவில் போர் செய்யவேண்டி யிருந்ததால், அதே சமயத்தில் அயர்லாந்தில் கலகஞ் செய்யவேண்டும்