பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மைக்கேல் காலின்ஸ்

கம்பெனியில் அமர்ந்திருந்தான். ஆனால், நாள் தவறாது கிம்மேஜுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்து வந்தான். கீட்டிங் என்ற இடத்திலிருந்த கெயிலிக் சங்கத்துக்கும் அவன் அடிக்கடி போவதுண்டு. அங்கிருந்த ஸீன் மாக் டயர்முடா என்னும் வீரசிகாமணியையும் அவன் அடிக்கடி சந்தித்து, அந்தப் பழைய நண்பனுடன் அளவளாவி வந்தான். அங்கு வேறு பல நண்பர்களும் அவனுக்கு அறிமுகமானர்கள். அவனுடைய வீரப் பார்வையும், அன்பும், ஆதரவும், ஒட்டுவாரை ஒட்டிக் கொள்ளும் உற்சாகமும் நண்பர்களைப் பரவசமாக்கி வந்தன. பெண்களின் கூட்டத்தில் அவனுக்கு அதிகக் கூச்சம் எற்படும்; ஆனால், தன்னையொத்த இளைஞர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பான்.

அவன் சீமையிலிருந்து படையில் சேராமல் தப்பி - வந்தவனதலால், எந்த நேரத்திலும் கைதி செய்யப்படக்கூடியவனா யிருந்தான். ஆதலால் தலைமறைவாக வாழ நேரிட்டது. பின்வாழ்வு முழுதும் பற்பல இடங்களில் மறைந்து வாழவேண்டியிருந்த அவன் அப்பொழுதுதான் அவ்வாழ்க்கையில் இறங்கிச் சிறிது பழகிக்கொள்ள நேர்ந்தது. அடிக்கடி அவன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டான். கடைசியாக அவன் வசித்துவந்த இடம் ராத்டெளன் ரஸ்தாவிலிருந்தது.

1914-ம் ௵ யுத்த ஆரம்பத்திலேயே அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக ஒரு பெரும் போர் தொடுக்கவேண்டுமென்று தொண்டர்கள் தீர்மானித்திருந்த போதிலும், அதற்குரிய சமயம் வாய்க்கவில்லை. முன்னர் 1848-லும் 1865-லும் செய்த தவறுகளும், அடைந்த தோல்விகளும், மறுபடி தோன்றக்கூடாவே என்று பலருக்குக் கவலை.