பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மைக்கேல் காலின்ஸ்


'நெருக்கடியான நிலைமையினால், நாளை ஈஸ்ட்டர் ஞாயிற்றுக் கிழமைக்காக ஐரிஷ் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா உத்தரவுகளின்படி ஊர்வலங்கள் அணிவகுத்துச் செல்லல் முதலியவற்றில் ஒன்றும் நடைபெறாது. ஒவ்வொரு தனிப்பட்ட தொண்டனும் இவ்வுத்தரவின் ஒவ்வோர் அம்சத்திற்கும் கண்டிப்பாகக் கீழ்ப்படிய வேண்டியது.'

இந்த அறிக்கை தொண்டர்களுக்குள்ளே பெருங் கலக்கத்தையுண்டாக்கிவிட்டது. மாற்ற முடியாத சில காரியங்கள் முன்கூட்டியே நிகழ்ந்திருந்தன. டப்ளின் நகரில் போராட்டத்தைத் துவக்கவேண்டிய ஊர்வலம் மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஏற்பாடாயிருந்தது. ஆதலால், எழுச்சியை நடத்தித் தீரவேண்டும் என்று துணிந்த முக்கியஸ்தர்கள் அதற்கு விரோதமாயிருந்த தொண்டர் படையின் பொதுக் காரியதரிசியைக் கைது செய்து, போராட்டம் ஏற்படும்வரை காவலில் வைத்துவிட்டார்கள். தொண்டர் படையின் பல பிரிவுகளுக்கும் பலவித உத்தரவுகள் பறந்தன. அதே சமயத்தில் மாக்னீல்-கூட்டத்தாரின் எதிர் உத்தரவுகளும் பறந்தன. மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் எழுச்சி நிச்சயமென்று முடிவு கூறப்பட்டது.

அச்சமயம் காலின்ஸ் ஒரு பெருங் தேசபக்தருக்கு மெய்காப்பாளனாகின்றான். அவர்தான் ஜோஸ்ப் பிளங்கெட் என்பவர். அவர் மரணப் படுக்கையிலே கிடந்து உழன்றுவந்தார். தாய்நாட்டின் விடுதலைப் போரிலே கலந்துகொள்ளும் பெருமை தமக்கும் வேண்டும் என்று அவர் பிடிவாதம் செய்து எழுச்சியில் கலந்து கொண்டார். அன்று தினம் முழு விவரமும் அறியாத தொண்டர்கள் பலர் நாட்டுப்புறத்திற்கும், கடற்கரைக்