பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மைக்கேல் காலின்ஸ்


52 மைக்கேல் காலின்ஸ் என்ற குட்டி யுத்தம் தோன்றிவிட்டதால், அதில் கைதி யாக்கப்பட்டிருந்தவர்களேயும் அடைக்கவேண்டி யிருங் தது. ஆதலால் ஜெர்மன் கைதிகள் வேறிடங்களுக்குக் கொண்டு போகப்பட்டு, அதேயிடத்தில் ஐரிஷ் கைதிகள் வைக்கப்பட்டார்கள். சுற்றிலும் முள் கம்பியால் வேலி போடப்பட்டிருந்தது. ஈஸ்ட்டர் கலக சம்பந்தமாய்க் கைதி செய்யப்பட்ட 1,800 ஐரிஷ்காரர்கள் அங்கே இருந்: தனர். ஐரிஷ் கைதிகளில் பலர் ஒரு குற்றமும் செய்யாத வர்கள்.ஸின் பீன் இயக்கத்தில் அனுதாப முள்ளவர்கள் என்று யார் யாரைப்பற்றி போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டதோ அவர்கள் அனேவரையும் கைதி செய்து இறையிட்டது அதிகாரிகளின் பெருந் தவருக முடிந்தது. நிரபராதிகள் துன்புறுத்தப்பட்டதைக் கண்ட ஜனங்கள் ஆத்திரங்கொண்டு ஆட்சிமுறையை வெறுக்க ஆரம்பித் தார்கள். தொண்டர்களிடம் முன்ல்ை அதுதாபமில்லாத வர்கள் படிப்படியாக அவர்களே நேசிக்கத் தொடங்கினர் கள். சிறைக்குள்ளேயும் அதிகாரிகளின் கினேப்புக்கு நேர் மாருக முடிந்தது. தீவிரமான புரட்சிக்காரர்களும், மித வாதிகளும், ஒன்றுமே அறியாத இளேஞர்களும் தேசத் தின் பல பாகங்களிலிருந்தும் கைதி செய்யப்பட்டு ஒரே யிடத்தில் அடைக்கப்பட்டதால், அவர்களுக்குள்ளே நேசப்பான்மையும் ஒற்றுமையும் வளர்ந்துவந்தது. உணர்ச்சியற்றவர்கள் உணர்ச்சி மிக்கவர்களுடன் பழக சேர்ந்ததால், தாங்களும் ஊக்கமடைந்தார்கள். எல்லோ, ரும் கருத்தொருமித்து, எதிர்காலத்தில் சுதந்திரத்துக் காகப் பெருமுயற்சி செய்வதற்கு அடிப்படையான ஒரு