பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94 மைக்கேல் காலின்ஸ் வைத் திறக்கலாமே யன்றி அந்த வெளிக் கதவைத் திறக்க முடியாது. ஆல்ை காலின்ஸின் சட்டைப் பையில் வேருெரு சாவி இருந்தது. அவன் அதை எ டுத்துப் பூட்டு வாயில் போடப் பார்த்தான். பூட்டு எளிதாய்த் திறந்துவிடும்போல் இருந்தது. ஆல்ை திடீ ரென்று சாவி ஒடிந்து போய்விட்டது. பாதிச் சாவி பூட்டுக்குள்ளேயும் பாதி காலின்ஸின் கையிலுமாக இருந்தது. அதே சமயத்தில் டிவேலராவும், அவர் தோழர்கள் மகாரியும், மில்ராயும் உட்புறத்துக் கதவைக் திறந்துகொண்டு வந்தனர். அடுத்த கதவு திறக்கப் படாமை கண்டு திகைத்தனர், பூட்டிலிருந்த உடைந்த சாவியை வெளியே தள்ளுவதும் கடினமாயிருந்தது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைந்ததே என்று அவர்கள் கலங்கினர்கள். டிவேலரா, சிங்தை தளராமல், தம் கையிலிருந்த ■ சாவியால் பூட்டின் பின் புறத்தில் குத்திர்ை. அவர்களுடைய பாக்கிய வசத்தால் பழைய சாவி வெளியே விழுந்தது. பின் அவர் தம் சாவியைக் கொண்டே அந்தப் பூட்டையும் எளிதில் திறந்துவிட்டார். யாவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறி வயற்புறத்தில் அதுள்ளிப் பாய்ந்தனர். வழியில் சில படை வீரர்கள் கின்றுகொண்டிருந்தனர். அவர்களேக் கண்ட தும் போலண்டு, நண்பர்களே, செளக்கியங்தான ? என்று கூேடிமம் விசாரித்துவிட்டு, தன் தோழர்களுடன் கம்பியை நீட்டினன். அவர்கள் லிங்கன் நகருக்குள் போனதும் காலின்லாம் போலண்டும் ரயில் மார்க்க ம்ாக லண்டனுக்குச் சென்றனர். மற்றையோர் மோட் டாரில் நிவார்க் நகருக்குப் புறப்பட்டனர். அங்கு சென்றபின், அவர்கள் மாஞ்செஸ்டருக்குப் போய்