பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# = மீட்சிப் படலம் * = 93. மூலமும் காலின்ஸ்-க்குச் செய்தி அனுப்பப்பட்டது. காலின்ஸ் பெப்ரவரி 8-ம்தேதி தோழர்களேச் சிறையி: லிருந்து வெளியே கொண்டு வருவதாக அவர்களுக்குத் தகவல் கொடுத்தான். அதே சமயத்தில் உஸ்க் சிறையி லிருந்த நான்கு ஐரிஷ் தொண்டர்கள் தப்பியோடிவிட்ட தாகச் செய்தி வந்தது. அதைக் கேட்டு காலின்ஸ் வருங் தினன். ஏனெனில், அதனுல் எல்லாச் சிறையதிகாரி களும் விழிப்படைந்து தன் வேலையைப் பாழாக்கி விடு. வார்கள் என்று அவன் எண்ணினன். குறித்த தினத்தில் காலின்ஸ், ஒரு மோட்டார் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மூன்று நண்பர் களுடன் லிங்கன் சிறையை அடைந்தான். மோட்டார் டிரைவர் சந்தேகங் கொள்ளாதபடி, அவனேக் காலின்ஸ் வெகு தொலையிலேய்ே நிறுத்திவிட்டான். காலின்ஸ், போலண்டு, கெல்லி மூவரும் சிறைக்குப் பின்னலிருந்த வயல்களே யடைந்து, சிறைச் சுவரிலிருந்த ஒரு ஜன்ன லடியில் படுத்துக்கொண்டனர். அங்கிருந்து குறித்த நேரத்தில் அவர்கள் ஒரு விளக்கொளி காட்டவேண்டும் என்றும், கைதிகள் அதற்குப் பதிலொளி காட்டினல் இருபக்கத்தாரும் தயாரா யிருப்பதாகப் பொருள் கொள்ளவேண்டும் என்றும் அவர்களுக்குள் முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சங்கேதப்படி, சமயம் வாய்த்தவுடன், வெளியேயிருந்து வெளிச்சம் காட்டப் பட்டது. உள்ளிருந்தும் பதில் வெளிச்சம் காட்டப் பட்டது. பின்னர் காலின்ஸ் சிறைக் கோட்டையின் பின் வாயிலே அடைந்து பார்க்கையில், அதில் வெளி யேயும் ஒர் இரும்புக் கதவு போடப்பட் டிருந்தது. உள்ளே அனுப்பப்பட்டிருந்த திறவுகோலால் உட்கத.