பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 -- மைக்கேல் காலின்ஸ் பட்டன. அவன் தைரியமும் சாமர்த்தியமும் இல்லாத வளுதலால், படங்களே டப்ளின் நகருக்கு அனுப்பிவிட் டுப் பேசாதிருந்தான். டப்ளினில் ஹாரி போலண்டு விஷயத்தைத் தெரிந்து கொண்டான். படத்திற் கண்ட சாவியைப் போல் ஒன்று தயாரித்து, அதை ஒரு ரொட்டிக்குள் வைத்துப் பொதிந்து கொடுத்தனுப் பினுன். காலின்ஸ் அந்த ரொட்டியை லிங்கன் சிறை யிலிருந்த கைதிகளுக்கு அனுப்பினன். கைதிகள் தங்கள் விடுதலை-ரொட்டி வந்ததாகக் களித்தனர். ஆல்ை அதிலிருந்த திறவுகோல் பூட்டுக்கு ஏற்றதாயில்லை. இரண்டாம் முறையும் ஒரு திறவுகோல் அனுப்பப் பட்டது. அதுவும் சரியாயில்லாது போயிற்று. பின்னர், காலின்ஸ் போலண்டை அழைத்துக் கொண்டு தானே நேரில் லிங்கன் சென்ருன். எவ் வகையாலும் தோழர்களே விடுவித்துக்கொண்டு போகத் தீர்மானித்தான். முந்திய அத்தியாயத்தில் டெயில் ஐரான் கூடியபொழுது காலின்ஸ்-ம் போலண்டும் சபைக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்விருவரும் லிங்கனுக்கு இந்தக் காரியத்திற்காகத் தான் போயிருந்தனர். வெளியில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் ரகசியமா யிருந்தது. லிங்கனில் டிவேலரா ஒரு புதிய திறவுகோலும் ஒர் அரமும் அனுப்பும்படி அவர்களுக்குச் செய்தி அனுப்பினர். அவ்வாறே காலின்ஸ் இரண்டையும் அனுப்பினன். கைதிகளில் டிலோக்ரேய் என்பவனுக்கு இரும்பு வேலை தெரியும். அவன் திறவுகோலேத் தக்கபடி திருத்தி அனுப்பின்ை. அச்சமயம் சிறையில் ஒரு தொண்டன் நோய் மிகுதியால் விடுதலை செய்யப்பட்டான். அவன்