உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மொழிப் போராட்டம்

இன்றைய நிலை

இன்று மறுபடியும் இந்தி மொழி சென்னை மாகாணத்தில் பாடத் திட்டமாக வலியுறுத்தப்படு கிறது. அன்றிருந்ததைப்போல மந்திரி பீடத்தில் காங்கிரஸ் கட்சியினர் வீற்றிருக்கின்றனர், ஆனால் சற்று அதிக பலத்துடன். நாம் பலம் என்று கூறு வது அதற்குள்ள செல்வாக்கையல்ல, பாதுகாப்பை. அன்று காங்கிரஸ் கட்சி மாகாண அரசியலைக் கைப் பற்றி மந்திரி சபைகள் அமைத்ததும், அவர்களது அதிகாரத்தின் அளவு மாகாண எல்லைக்குள் அடங்குவதாயிருந்தது. மாகாணங்களை மிஞ்சும் அளவுக்கு அதிகாரம் படைத்த மத்திய ஆட்சி, வெள்ளை ஏகாதிபத்தியத்திட மிருந்தது. இன்றோ பாகிஸ்தான் நீங்கலாக உள்ள இந்தியாவின் மாகாண ஆட்சிகளும், மத்திய அரசாங்க ஆட்சியும் காங்கிரஸ் தலைவர்கள் கையிலிருக்கின்றன எனவே எதையும் செய்வதற்கு மத்திய அரசாங்கத்தின் தூண்டுதலும், ஆதரவும் மாகாண மந்திரி சபை களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. எந்த எதிர்ப்பை யும் சமாளிப்பதற்கு படை பலமும், பண பலமும் பத்திரிகை பலமும், பிரசார பலமும், தடியடியும், துப்பாக்கிப் பிரயோகமும், தோட்டா மருந்தும், கண்ணீர்ப் புகையும், எல்லாவற்றையும்விட இவ்வ ளவு கொடுமைகளையும் பொது மக்களின்மீது பாய்ச்சுவதற்கான ஆணவமும், அரசியல் விவேக மற்ற தன்மையும் காங்கிரஸ் மந்திரி சபையிடம் ஏராளமாக இருக்கின்றன.

து

1938-ல் ஆச்சாரியார் மந்திரி சபை கொலுவீற் றிருந்த காலத்தில் ஆரம்பித்துப் பின் விடுபட்டு