அன்றும் இன்றும்
11
நாட்டு ஏகாதிபத்திய ஆட்சிக்குட்பட்டு, முன்பிருந் ததைப்போன்ற நிலையிலேயே வாழும்படி ஏற்பட்டு விட்டது. தமிழகத்தின் - அதாவது திராவிடத்தின் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையி லும் வடநாட்டாரின் ஆதிக்கம் வளர்ந்தது. வட நாட்டு ஆதிக்கப் பிடியிலிருந்து தென்னாடு விலகித் தீரவேண்டும் என்ற எண்ணம் சற்று வலுவடைய ஆரம்பித்தது. அதன் விளைவாக, ( தமிழும் அத னைச் சேர்ந்த குழுமொழிகளும், அவைகளைப் பேசு வோரின் கலாச்சாரமும், வரலாறும் ஆகிய இவை கள் வடநாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டனவாக விளங்குவதால் திராவிடம் வடநாட்டிலிருந்து பிரி வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற தெளிவு பிறந்தது. அதன் பிறகு திராவிடன், திராவிடம் என்ற உணர்ச்சி மக்களிடத்தே அரும்பத் தொடங் கவே "திராவிடநாடு திராவிடருக்கே" என்ற ஒலி திரா விடரின் இலட்சிய கீதமாக மாறிற்று.
ற
சு
மொழிப் போராட்டத்தில் உருவாகிய மறு மலர்ச்சி இயக்கம் கலாச்சார வரலாற்று ஆராய்ச்சி களில் இறங்கி, பிரிவினைத் திட்டத்தை வலியுறுத் தும் அரசியல் இயக்கமாக மாறியது. வடநாட்டுப் பொருளாதார, அரசியல் பிடியிலிருந்து விடுதலை யடைந்து, பேதமற்ற சமூக அமைப்பில் வாழுவதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்ட அந்த இயக்கம், திராவிடக் கழகமாகத் திகழ ஆரம்பித் தது. வடநாட்டின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்க்கும் சக்தியாக திராவிடக்கழகம் வளர்ந்தது; வளர்ந்து வருகிறது!