10
மொழிப் போராட்டம்
இது ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தவிதமும் அதன் முடிவுமாகும்.
மக்
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முடிவு மறு மலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பமாயிற்று. போராட் டம் நின்றவுடன் தமிழ்த்தென்றல் தமிழ் மக்களின் உள்ளங்களிலெல்லாம் வீசத்தொடங்கிற்று. கள் உள்ளத்தில் அரும்பிய தமிழ்ப்பற்று பழந்தமிழ் இலக்கியங்களின் மீது தாவ ஆரம்பித்தது. அவை களிலிருந்து தமிழகத்தின் நாட்டுவளம், மொழி வளம், இனப்பண்பாடு ஆகியவை புலப்பட்டன. மொழிப்பற்று இனப்பற்றிற்கும், இனப்பற்றிற்கும், இனப்பற்று நாட்டுப்பற்றிற்கும் கொண்டுபோய்விட, "தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை வேட்கைக் எழுந்தது.
குரல்
தமிழகம் வடநாட்டானுக்கு சந்தைக்கடை யாகவும், வெள்ளையனுக்கு வேட்டைக்காடாகவும்
விளங்குவது மக்களுக்கு உணர்த்தப்பட்டது.
ஆட்சிபீடத்திலிருந்து வெள்ளையனை நீக்கவும், வாணிகத்திலிருந்து வடநாட்டானை விரட்டவும் வேண்டும் என்ற உணர்ச்சி மக்களிடத்தே கிளர்ந் தெழுந்தது. இரண்டாவது போருக்குப்பின் உல கில் ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக, வெள்ளை யன் தானாகவே விலகிச் செல்ல நேரிட்டது. தமி ழகம் உள்ளிட்ட இந்திய துணைக்கண்டம் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிப்பிடியினின்றும் விடுதலை பெற்றது என்றாலும், அதற்குப் பிறகும் தமிழகம் (திராவிடம்) தனித்து வாழ வழியில்லாமல், வட