உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றும் இன்றும்

9

தெரிந்திருந்தால் இதில் தலையிட்டிருக்கமாட்டேன் " என்று சொல்லி ஆச்சாரியார் மனங்கலங்கினார். ஆனால், மயக்கம் அப்பொழுதும் தீர்ந்தபாடில்லை. 'ஒரு கை பார்த்து விடுவேன்' என்று இறுமாப்புடன் கூறிய அந்த ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தெளிவு பிறந்திருக்கவேண்டும். ஏனோ பிறக்கவில்லை!

சென்னையில், அலைகடலை யடுத்துப் பரந்து கிடக்கும் மணற்பரப்பில்-மக்கள் கடல், பலதடவை கள் தேங்கிற்று. மக்கள் இலட்சக் கணக்கில் கூடினர். மைல் கணக்கில் நீண்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. திருச்சியிலிருந்து பெரும்படை யொன்று கிளம்பிச் சென்னையைச் சேர்ந்தது. இவ் வளவும் இந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்று எச்சரிக்க. அந்த அளவு சக்தியை இந்தி எதிர்ப்பு இயக்கம் கொண்டிருந்தது ஆச்சரியமானது. எதிர்ப்பின் அளவும், சக்தியும் கூட அல்ல; அவ் வளவு மாபெரும் மக்கட்கடலை ஈர்த்த இயக்கம், மிக அமைதியான முறையில் நடந்ததுதான்.

மக்களின் எதிர்ப்புச் சக்தியைத் தாங்கமாட் டாமல், நாள்தோறும் நலிவடைந்து கொண்டிருந்த மந்திரி சபை, அகில இந்தியக் காங்கிரஸ் தீர்மானப் படி, ஆட்சிபீடத்தை விட்டு அகல வேண்டி நேரிட் டது. காங்கிரஸ் மந்திரி சபை கலைந்ததும், கட்டாய இந்தியும் கைவிடப்பட்டது. சிறைவாயிலும் திறக் கப்பட்டது, தலைவர்களும் தொண்டர்களும் வெற் றிக்களிப்போடு வெளியேறினர்.