8
மொழிப் போராட்டம்
ஆயிரம், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டு, பெரியார் ஈ. வெ. ரா. பெல்லாரி சிறையில் சாதா ரணக் கைதியைப் போல சிறைவைக்கப்பட்டார். தோழர்கள் சி.என். அண்ணுத்துரை, சி. டி. நாயகம்,அடிகள் போன்றாரும் தலைதாழாச் சிங்கமெனச் சிறையிலே கிடந்தனர். ஆச்சாரியார் அரசாங்கம் தாளமுத்து, நடராசன் என்ற இரு தொண்டர்களையும் மனிதர் களாக ஏற்றுத் திருப்பித் தரும்போது பிணங்க ளாகக் கொடுத்தது வேதனை மிகுந்த காட்சி! எனி னும் வேதனையுள்ளங்கள் வெடி மருந்துச்சாலைக ளாகவே காட்சியளித்தன.
தனர்.
தலைவர்களையும் தொண்டர்களையும் சிறையி லடைத்துவிட்டால் இயக்கத்தின் வேகம் தணிந்து நசித்துவிடும் என்று மந்த மதியினர் எண்ணியிருந் அதற்கு மாறாக இயக்கம் வளர்ந்தது; எழுச்சி அடங்குவதாயில்லை. மந்திரிமார்களுக்குச் சென்றவிடமெல்லாம் எதிர்ப்பு. எதிர்ப்பின் அடை யாளமாகக் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. மந்திரிகள் திரும்பிப்பார்க்குந் திசைகளிலிருந்தெல் லாம் "திரும்பிப்போ" என்ற முழக்கம். எங்கணும் கண்டனம். 'இந்தி ஒழிக,' 'தமிழ் வாழ்க' என்ற பேரொலி! மக்களின் நடுவிலே பவனிவரவேண்டிய மந்திரிகள் பதுங்கிச் சென்ற இடங்கள், ஓடிஒளிந்த சமயங்கள், கேட்ட கேள்விகளுக்குப் பதிலிறுக்க முடியாமல் ஓடிப்போன சந்தர்ப்பங்கள், பேசுவ தற்கென அழைக்கப்பட்டுக் கைவிடப்பட்ட கூட் டங்கள், வெட்கித் தலைகுனிந்த நேரங்கள் எவ்வ ளவோ ! "இவ்வளவு தூரம் தகராறு முற்றிவிடும் என்று