உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய மொழியா ? பொது மொழியா? 23

கள் ஆகியோர் கூற்றுப்படி, தமிழும் அதனோடு தொடர்புடைய திராவிடமொழிகளுமே உண்மை யான தேசிய மொழிகளாகும். கொட்டும் புனல் குமரியிலிருந்து, இமயப்பெருமலை வரை உள்ளிட் டுப் பரந்துகிடக்கும் பெருவெளி முழுமையும் பர விக்கிடந்து, சிந்துநதி தீரத்தில் சிறப்புடன்

தவழ்ந்து, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைப்பண்பிலும், காவிய வளர்ச்சியிலும் சிறப்புற் றோங்கிய. திராவிட நாகரிகத்தின் சின்னமாக விளங்கும் தமிழும், அதன் கிளைமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழி களுமே தேசிய மொழிப்பட்டியலில் முதலிடம் பெற வேண்டியவைகளாகும். இப்படிக் கூறுவதன் மூலம் தமிழ்தான் இந்தியாவின் முதன்மொழி என்றோ, திராவிடக் குழுமொழிகளைத்தவிர ஏனைய மொழிகள் இந்தியாவிலே இருக்க இடம் கிடையா தென்றே நாம் கூற முன்வரவில்லை. இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று வலியுறுத்தி வருவோர், எதை முக்கிய அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்களோ அந்த 'தேசிய' அடிப் படையை அலசிப்பார்க்கும்போது, திராவிடமொழி களே தேசிய மொழியாவதற்கு அதிகம் உரிமை யுடையன என்பது பெறப்படுகின்றது என்பதை அன்னார்க்கு உணர்த்துதற்பொருட்டே இவற்றைக் கூறுகிறோம்.5

அறிஞர்க

தேசிய மொழியாக இந்தி வலியுறுத்தப்பட்ட பொழுது, வடஇந்தியாவிலிருக்கும் ளிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பாமற்போகவில்லை.