உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மொழிப் போராட்டம்

மொழிப் பிரச்சினையைப்பற்றி விவாதிக்கவந்த சர். டேஜ் பகதூர் சாப்ரூ கூறுகிறார்:-

"இந்த மொழியை (புதிதாக அமைக்கப் பட்டு இந்துஸ்தானி என்று அழைக்கப்படும் மொழியை) (தேசீய' மொழியென வலிந்து அழைத்து நாம் ஏன் அவதிப்பட வேண்டும். எனத் தெரியவில்லை. வடஇந்தியாவில் கடந்த இருநூறு ஆண்டுகளாக அது (இந்தி) வகித்து வந்த இடத்தைத் தொடர்ந்து அமைத்துக் கொள்ளுமானால் அது போதுமானது. தெலுங்கு, தமிழ், குஜராத்தி, வங்காளி முத லிய மொழிகளும் இந்தியைப்போலத் தேசீய மொழிகளே.இந்த மாகாணங்களில் தெலுங்கு, தமிழ், குஜராத்தி, வங்காளி முதலிய மொழி களில் என் குழந்தைகளைப் படிக்கச் சொல் கட்டாயப்படுத்தினால் நான் பலமாக

லிக்

எதிர்க்கமாட்டேனா ?")

இந்தக் குரல் தென்னாட்டிலிருந்து எழுந்ததல்ல, வடநாட்டுத் தலைவர் சாப்ரூ கூறுகிறார். மொழி விவாதத்தில் அவருடைய சொற்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுப்பவர் யாரும் இருக்கமுடியா து. அர சியல் தலைவர் என்ற காரணம் மட்டுமல்ல, இந்தி, உருது மொழிகளை நன்கு பயின்றவர்; அகில இந் திய உருதுமொழி சம்மேளனத்தின் தலைவராகக் கூட சில காலம் இருந்தவர், அவர் உணர்கிறார் தமிழ், தெலுங்கு போன்ற சிறந்த மொழிகளைப் புறக்கணித்துவிட்டு, இந்தியை மட்டும் தேசிய மொழி யெனப் பறையறைதல் அடாதது, அர்த்த மற்றது என்று.