உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய மொழியா ? பொது மொழியா? 25

மொழிப் பிரச்சினையைத் துவக்கியவர்களும், இந்தியைத் தேசிய மொழியெனப் புகன்றோரும், அதை ஆதரித்து நின்றோரும் மற்ற மொழிகளைப் புறக்கணிக்க வேண்டுமென்ற எண்ணமோ, இழித் துரைக்க வேண்டுமென்ற விருப்பமோ கொள்ளாத வர்களாக இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறை யில் நிகழ்ந்தது புறக்கணிக்கப்பட்ட நிலைதான். பலதிறப்பட்ட பல்வேறு மொழிகள் தனித்தனியே சிறந்து வளர்ந்தோங்கி வரும்பொழுது, ஒரு தேசிய மொழி வேண்டும் அதுவும் இந்திதான் என்ற கவலை ஏன் பிறந்தது? பல மொழிகளையுடைய ஒரு கண்டத் தில் அத்தகைய கவலை பிறக்கலாமா ? வேதனையின் விளைவுகள் நாலாபக்கங்களிலும் வெடித்தெழாமல் போகுமா?

இந்திய துணைக்கண்டம் வெள்ளை ஏகாதிபத்தி யத்தின் இரும்புப் பிடியிலே சிக்குண்டிருந்தது. அந்தப் பிடியினின்றும் இந்தியாவை விடுவிக்க ஒரு மித்த ஒன்றுதிரண்ட உரிமை வேட்கை தேவைப் பட்டது. வெள்ளை ஆட்சியை எதிர்க்கும் செயலில் ஈடுபட, அவன் துப்பாக்கி முனையின் கீழ் இருந்த பல பகுதிகளும் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. செயலாற்ற ஒரே உணர்ச்சி கொள்ள வேண்டியிருந்தது. ஆகவேதான் இந் தியா என்று சுட்டிக்காட்டப்பட்டு, அது சுதந்திர மாக இருந்த நிலை எடுத்துக் காட்டப்பட்டு, வெள்ளை யன் ஆட்சியின் கீழ்ப்படும் அவதி உணர்த்தப்பட்டு, மற்ற நாடுகள் சுதந்திரமாக வாழும் தன்மை அறி வுறுத்தப்பட்டு விடுதலை வேட்கை யுணர்ச்சி மக்க