உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மொழிப் போராட்டம்

கிருதம் மிகுந்த இந்தியின் பக்கமே இருந்தன. இதைப்பற்றி இந்திய மொழியாராய்ச்சியில் தலை சிறந்த சர்.ஜி.ஏ. கீரையர்சன் தாம் எழுதிய 'இந்திய மொழி ஆராய்ச்சி' (Linguistic Survey of India) என்ற நூலில்:

CC

துரதிர்ஷ்டவசமாக ஆங்கில அதிகாரி களின் பலமான ஆதரவனைத்தும் சமஸ்கிருத. வாதிகளின் பக்கமே இருந்தது. சமஸ்கிருதங் கலந்த இந்திக்கே கிருஸ்தவ பிரசார சபை கள் ஆதரவு காட்டின; கிருஸ்துவ மத வேத மான பைபிள் சமஸ்கிருதம் மிகுந்த இந்தியி லேயே மொழி பெயர்க்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடான, ஆனால் தவறான முயற்சியை எதிர்த்து ஒரு சில இந்திய எழுத்தாளர்கள் போராடியது பலனளிக்கவில்லை ”

என்று கூறியுள்ளார்.)

இந்து மத மறு மலர்ச்சியையும், சமஸ்கிருதம் மிகுந்த இந்தி மொழியையும் முஸ்லிம்களுக்கு எதி ராக வெள்ளை அதிகாரிகள் வளர்த்து வந்ததற்குக் காரணம் இருந்தது. சிப்பாய்க் கலகம் திரும்பவும் மொகலாய அரசை உண்டாக்க முயன்றதால், சிப் பாய்க் கலகம் அடக்கப்பட்டதும் முஸ்லீம்களுக் குள்ள பலத்தையே ஒடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவு மதவேற்றுமைகளை யும், மொழிச் சண்டையையும் தூண்டிவிட்டது. இந்துக்களின் தனிப்பட்ட முயற்சி, பிளாவட்ஸ்கி, அன்னி பெஸன்ட், ஆல்காட் போன்றவர்களாலும் வளர்ச்சியடைந்தது.