உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட நாட்டில் மொழிச் சண்டை

45

(மத வேறுபாடு காரணமாக எழுந்த வகுப்பு வேற்றுமையில் மொழிச் சண்டை முதல் கட்டமாக இருந்தது. இந்தியை ஆதரித்து 1867ல் பீகார் மாகாணத்தில் பிரசாரம் ஆரம்பித்தது. பின் அது ஐக்கிய மாகாணத்தில் பரவி, அலகாபாத் காசி போன்ற இடங்களில் இந்திப் பிரசார சபை கள் நிறுவப்பட்டன. இலக்கிய ஆசிரியராக விளங்க கிய சர் சையது மகமது என்பவர் இந்த முயற்சிகளைக் கண்டித்து உருது மொழிக்காகப் போராடினார். தன்னாலான வரையிலும் முயன்று பார்த்தார். பய னேதும் ஏற்படவில்லை.

ஐக்கிய மாகாணத்தில் அந்தோனி மாடனால்ட் என் பவர் கவர்னராக வந்ததும், இந்திக்கு ஆதரவு கரித்தது. ஆங்கிலத்திற்கு அடுத்த முக்கிய மொழி யாக இந்தியைக் கொண்டுவர புது கவர்னர் பாடு பட்டார். சையது மகமது இறந்ததும் அவருடைய இடத்தில் உருதுவுக்காகப் பாடுபட அப்துல் மல்க் என்பவர் முன் வந்தார். உருதுவை ஆதரித்து மல்க் பேசுவது கவர்னருக்கு சீற்றத்தை உண் டாக்கியது. உருதுவுக்குப் பரிந்து பேசுவது நிற்க வில்லையானால், கல்லூரியொன்றில் மல்க் வகித்து வந்த பதவியைவிட்டு அவர் வெளியேற வேண்டி நேரிடும் என கவர்னர் அவருக்கு எச்சரித்தார். அதன்பின் உருதுவுக்கு ஆதரவு கொடுப்பதை மல்க் நிறுத்திக் கொண்டார். மக்டனால்ட் ஆட்சியில் இந்தி முக்கிய மொழியாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.)

பின் சில காலம் இந்தி வளர்ச்சி தேங்கியே இருந்தது. பாரசீக, உருது மொழிகளிலிருந்த