உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

.

47

இந்தி-உருது சண்டை வலுக்க வலுக்க, சமஸ்கிருத சொற்கள் தேடிப் பிடிக்கப்பட்டு இந்தி யில் மிகுதியாக சேர்க்கப்பட்டன. இந்தியில் எழுத ஆரம்பித்த தேசிய தலைவர்களும் சமஸ்கிருதச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தினர் அதே போல் உருது மொழியாசிரியர்கள் அரபி, பாரசீக சொற்களை நிரம்ப எடுத்தாளுவதில் முனைந்தனர் இதனால் இரு மொழிகளுக்குமிடையிலிருந்த பிளவு பெருகியதுடன் மொழிப் பிரச்சினையோடுமட்டும் நில்லாமல் இந்து - முஸ்லிம் வேற்றுமைக்கு அழை த்துச் சென்றது.

பொதுமொழி ஒன்று வேண்டும் என்ற எண் ணம் எழுந்ததற்குக் காரணம், நாட்டுமக்களிடையே ஒற்றுமை உண்டாக்க வேண்டுமென்பதற்காகும். ஆனால் அது இரு வகுப்பினரிடையேயும் சச்சரவை உண்டாக்குவதற்குத்தான் காரணமா யிருந்தது. இந்த சச்சரவு விடுதலை இயக்கத்தைப் பாதிக்கு மளவுக்கு வளர்ந்ததால், அதைத் தணிக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காகப் பொது மொழிக் கொள்கை கைவிடப்படவுமில்லை. மாறாக இருவகுப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சி ஒன்று செய்யப்பட்டது. அதுதான் இந்துஸ்தானி.

இந்துஸ்தானி

f 1931ல் கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தி யாவின் பொதுமொழியாக வேண்டும் என்ற தீர் மானத்தை நிறைவேற்றியது.) ஒரு சபையின் தீர் மானத்தால் நிறைவேற்றப்பட்ட மொழி இந்துஸ்