உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மொழிப் போராட்டம்

தானியைத் தவிர வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது. இந்துஸ்தானியைப்பற்றிச் சொல்லப் பட்டதும், மொழிப்பிரச்சினையில் ஈடுபட்டிருந்த இரு சாராருமே அதை வியப்புடன் கவனித்தார் கள். எவரும் எதிர்பார்க்க வில்லை. இந்துஸ்தானி என்றால் என்ன? அதைப் பற்றி ஒவ்வொருவருங் கொடுத்த பதில் வேடிக்கையாக இருந்தது.

இந்துஸ்தானி பிரசாரத்திற்கு முதல் காரண மாக இருந்த பெரியார் காந்தியார் அந்த மொழிக் குரிய நிலைமைகளைக் கூறுகிறார்:-

CC

t" (1) நமது பொதுமொழி இந்துஸ்தானி என்று அழைக்கப்படவேண்டும். இந்தி என்று அழைக்கப்படக் கூடாது.

(2) இந்துஸ்தானியை எந்த மதத்தையும் சார்ந்தவொரு மொழியாகக் கருதக் கூடாது. (3) அந்நிய மொழியா', 'சொந்த மொழியா' என்று பாராது வழக்கிலுள்ள சொற்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

(4) இந்து எழுத்தாளர்கள் வழங்கும் உருது சொற்களையும், உருது எழுத்தாளர்கள் வழங்கும் இந்தி சொற்களையும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(5) கலைச் சொல்லாக்கத்தில் குறிப்பாக அரசியல் சொற்றொடர்களில் சமஸ்கிருத

சொற்களை மட்டும் மிகுதியாக எடுத்துக் கொள் ளாமல், உருது, இந்தி, சமஸ்கிருதம் மூன்றி