உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

49

லிருந்தும் சொற்களை எடுத்துக்கொள்ள

வேண்டும்.

(6) தேவநாகரி, அரபி என்ற இரண்டு வரி வடிவங்களையும் இந்துஸ்தானியை எழுது வதற்கும் பயன்படுத்தலாம். இந்துஸ்தா னியைப் பரப்புபவர்கள் இரண்டு வரி வடிவங் களுக்கும் (லிபிகளுக்கும்) வசதிகள் செய்ய வேண்டும்".

இவ்வாறு காந்தியார் காட்டியுள்ள விதிகளைக் கவனித்தால் பொது மொழித்தகராறு எவ்வளவு தூரம் முற்றிவிட்டது என்பதை விளக்கும்.

உருது

காங்கிரசிலும், காங்கிரசைச் சார்ந்த பி ர சார-செயல் அமைப்புகளிலும், உருதுவுக்கு எதி ராக இந்திப் பிரசாரமே வலுத்திருந்தது. மொழியாளருக்கு இந்தப் பிரசாரம் பிடிக்கவில்லை காங்கிரசுக்கு வெளியிலிருந்தோர் இந்தி-உருது சண்டையை முக்கிய பிரச்சினையாகக் கொண்டு வாதாடினார்கள். எனவேதான் இந்தியைப் பொது மொழியாகக் கூறக்கூடாது என்றும், இந்துஸ் தானியே இந்தியாவின் பொதுமொழி என்றும் காந்தியார் அறிவித்தார்.

காந்தியார் கொடுக்கும் 2வது விதியால் இந்தி உருது சண்டை மதவேற்றுமைகளைக் கிளப்பி விட்டதுடன், அரசியல் பொதுவாழ்வைப் பயமுறுத் தும் அளவுக்கு வளர்ந்து விட்டது என்பது நன்கு விளங்கும்.

இந்துஸ்தானிக்குரிய சொற்களைப்பற்றி 3, 4 விதிகளில் கூறப்பட்டிருப்பவைதான் வேடிக்கை யாக இருக்கின்றன. சொற்களைத் தேர்ந்தெடுக் கும் வகை, இருசாராரையும் சமாதானப்படுத்தும் படியாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்த

4