உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மொழிப் போராட்டம்

மிகக்

விதிகளைச் சேர்த்திருக்கிறார். நடைமுறையில் இந்தி, உருது பண்டிதர்களை அழைத்து, இந்தி இலக்கியத்திலிருக்கும் உருதுச் ச் சொற்களையும், உருது இலக்கியத்திலிருக்கும் இந்திச்சொற்களையும் கணக்கெடுக்கும்படி கூறியிருந்தால், மிகக்குறைந்த அளவுக்குத்தான் செற்கள் கிடைத்திருக்கும். ஒரு சொல்லை எடுத்துக்கொண்டால் அது தனது மொழிக்குத்தான் சொந்தமுடையது என வாதித் திடத்தோன்றும். இந்த விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மிகுந்திருக்கும் சொற்கள் மிக குறைந்த எண்ணிக்கையினவாகவே இருக்கும். உண்மையில் மொழிச் சண்டை ஏற்படுவதற்குமுன் கணக்கெடுத்திருந்தால் இரண்டுக்கும் பொதுவாகப் பல சொற்கள் இருந்திருக்கும். மொழிச்சண்டை வளர்ந்த பின் இந்திமொழியில் சமஸ்கிருதச் சொற் களும், உருது மொழியில் பாரசீக-அரபிச் சொற் களும் அதிகமாக சேர்க்கப்பட்டதால், பொதுச் சொற்கள் வலுக்கட்டாயமா இருதரப்பினராலும் குறைக்கப்பட்டன. இந்தச் சொல்லாராய்ச்சியை ஆரம்பித்து, ஒரு தனிப்பட்ட சொல்லை வைத்துக் கொண்டு அது எம்மொழியைச் சார்ந்தது என்று விவாதிக்கத் தொடங்கினால், இருதரப்பினரும் பொதுவான மொழி வேற்றுமைக்காகப் போராடு வதை விடுத்து ஒவ்வொரு சொல்லுக்கும் 'இந்தி சொல்லா?' 'உருதுச் சொல்லா?' என்று சண்டை யிட ஆரம்பித்திருப்பார்கள். இந்துஸ்தானிக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை இம்முறையில் தொடங்கியிருந்தால், காந்தியார் கனவு சமரசத்திற்குப் பதிலாக, சச்சரவே இன்னும் விரைவாகவும் மிகவாகவும் கிளம்பியிருக்கும். இந்துஸ்தானியின் நிலையைப்பற்றி ஜவஹர் லால் நேரு கொடுக்கும் விளக்கும் மேலும் தெளிவு படுத்துவதாக இருக்கிறது. அது வருமாறு:-

கண்ட