உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மொழிப் போராட்டம்

தென்னாடும் திராவிடக் குழுமொழிகளும்

குழு

தென்னாட்டைப்பற்றியும், திராவிடக் மொழிகளைப்பற்றியும், மொழிப் பிரச்சினையை விவாதித்தவர்கள் எந்த அளவுக்குக் கவலைப் பட்டார்கள் என்பதைச் சற்றுக் காண்போம். பொதுமொழிக்கு வரிவடிவம் தேடி, தேவ நாகரி, உருது என்ற இரண்டுவித எழுத்துக்களையும் பயன்படுத்தலாம் என்று கூறும்பொழுது, மேற்கு இந்தியாவில் உருதுச் சொற்கள் வழங்கு வதால் அங்கு உருது எழுத்துக்களும், வங்காளத் திலும் தென்னிந்தியாவிலும் சமஸ்கிருதச் சொற் கள் மிகுதியாக வழங்குவதால் தேவநாகரி எழுத் துக்களும் பயன்படுத்தப்படலாம் என்று காந்தியார் கருதினார்.

வட

பொதுமொழிக்குரிய எழுத்துக்களைப் பற்றி பேசவந்த ஜவஹர்லால் நேரு இன்னும் சற்றுப் பாது காப்போடு கூறியுள்ளார்.

"வட இந்திய எழுத்துக்கள் தென்னிந்திய திராவிட மொழிகளிடை எவ்வளவு தூரம் ஒத் துப்போகும் என்பது பற்றியும், அல்லது அவைகளுக்குள்ளாகவே ஒரு வரி வடிவத்தை உண்டாக்கிக்கொள்ள முடியுமா என்பது பற் றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது"

என்று விளக்கியுள்ளார். பொதுமொழி தேவை யென்று முடிவு செய்யப்பட்டபின், பொது மொழி என்று ஒன்றை உண்டாக்கிய பின், எந்த எழுத்துக் களைப் பயன்படுத்துவது, தேவநாகரி எழுத்துக் களையா, உருது எழுத்துக்களையா என்ற ஐயம் தோன்றியது. புதிதாகத்தோன்றிய இந்த ஐயப் பாடு முதலிலிருந்து ஆரம்பித்துவந்த அவ்வளவு தூரத்தையும் கடந்து ஆரம்ப நிலைக்கே அடித்து