உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னாடும் திராவிடக் குழுமொழிகளும்

59

விரட்டும் ஐயப்பாடாக அமைந்தது. 'வடநாட்டு எழுத்துக்கள் தென்னுட்டு திராவிட மக்களிடை ஏற்றுக்கொள் ளப்படுமா?" பண்டிதநேருவுக்கு 1939-ல் உண்டான சந்தேகம் இது. அந்த சந்தேகத்தைத் தீர்ப்பதை விட, சந்தேகம் எழும்பிய விதத்தையும், விளைவை யும் நன்கு பார்க்கவேண்டும். வட நாட்டு எழுத் துக்களே தென்னாட்டினர்க்குக் கசக்கும் தன்மை யன என்ற சந்தேகமிருக்கும்பொழுது, அந்த எழுத்துக்களையுடைய மொழியை, மொழியை உட் படுத்தி விளங்கும் பண்பாட்டை எவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வார்கள்!

வடநாட்டு எழுத்துக்கள்-தென்னாட்டுத் திரா விட எழுத்துக்கள்: இவ்விருவகை எழுத்துக்கள், ஒன்றிற்கொன்று வேறுபாடுடையன என்பதை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், இவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்பட்டு விளங்குவனவாகும் என்பதையும் நேரு ஒப்புக்கொள்கிறார். ஆகவே தான் வடநாட்டு எழுத்துக்களைத் தென்னாட்டார் ஒப் புக்கொள்வார்களோ என்னவோ என்ற சந்தேகம் இவருக்குப் பிறந்திருக்கிறது. பொதுமொழியாக ஒப்புக்கொண்டாலும், எழுத்துக்களை ஒப்புக்கொள் வார்களோ என்று எண்ணி வகைக்கொரு வரி வடிவங் கூற முற்பட்டார். பொதுமொழியாவதற் குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துஸ்தா னிக்கு, மூன்றுவித வரிவடிவங்களை ஏற்றுக்கொள் ளும்படி அவர் அறிவுறுத்துகிறார்.

"வங்காளி, குஜராத்தி, மராட்டி உள்ளிட்ட தேவநாகரி ஒன்று இரண்டாவதாக உருது: மூன்றாவதாக அவசியமானால் தென்னாட்டுக்கு ஒருவகை வரிவடிவம்;"

என்று

பண்டித நேரு விளக்கியுள்ளார். ஒரு மொழிக்கு மூன்றுவகை எழுத்துக்கள். ஒன்று தேவநாகரி; இரண்டாவது உருது; மூன்றாவதாக