உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மொழிப் போராட்டம்

அவசியமிருந்தால் திராவிட எழுத்து வடிவம். இந்தக் கருத்தை ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 1939-ல் அவர் வெளியிட்டார். குறிப்பிடப் பட்ட மூன்று வரிவடிவங்களில் ஒன்று (உருது) கழிந்துவிட்டது. பாகிஸ்தான் பிரிந்துவிட்ட காரணத்தால், மிகுந்திருக்கும் இரண்டுக்கும் பாகப் பிரிவினை என்று ஏற்படப்போகிறதோ தெரிய

வில்லை!

பொதுமொழிப்பற்றி விவாதித்த வடநாட்டுத் தலைவர்களின் பெரும்பாலோர், சமஸ்கிருதமே இ தியமொழிகள் எல்லாவற்றிற்கும் தாய்மொழியாகும் என்ற தவறான கருத்தைப் பரப்பிவரலாயினர். அந்த அடிப்படையின் மீது தங்கள் வாதங்களை வைத்து பிரச்சினைகளை எழுப்பினர்.

உருது மொழிப் பேராசிரியரும், காந்தியாரால் நன்கு மதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக் மட்டும், சமஸ்கிருதங் கலந்த இந்தியைத், தென்னாட்டில் புகுத்த எண்ணும் முயற்சியைக் கண்டித்தார். அவர் கூறுகிறார்:-

“தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதம் முதலிடம் பெறுகின்றது என்று நாம் நினைப் பது உண்மையல்ல, மேலும் இந்தி நுழைவு அவர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தை அழிப்பதாகும் என அவர்கள் எதிர்த்திருக்கிறார்கள்.

என்று. இது, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்த பிறகு, அவர் எழுதிய கட்டுரையில் காணப் படுவதாகும். தென்னாட்டில் அன்று

எழும்பிய எதிர்ப்பு வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; அது கலாச்சாரப் போர் என்பதை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அவரால் அறிந்துகொள்ளளப்பட்ட அரிய கருத்தை இங்கே இருப்போரில் சிலர் கண்