உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னாடும் திராவிடக் குழுமொழிகளும்

61

ணிருந்தும் காண மறுக்கிறார்கள்; காது இருந்தும் கேட்க வெறுக்கிறார்கள். (சுமித்திரானந்தன் பந்த் என்பவர், “ “சமஸ்கிருத மொழிக்கு அப்பாற்பட்டவை திராவிடமொழிகள் என்று கூறினார்./

தீவிர தேசிய காங்கிரஸ் வாதியாக விளங்கிய தசீர் என்பவர், "புதிதாக அமைக்கப்படும் இந்துஸ்தானியை திராவிட மொழியினர் மீது திணிப்பது கூடாது; அது பய னற்றது. கெடுதலை உண்டாக்குவது" என விளக்கிக் கூறினார். மொழிச் சண்டைகளால் உண்டாகிய சங்கடத்தைக் கூறும்போது, "இந்தி-உருது, இந்தி தமிழ் சண்டைகள் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டன" என்று கவலைப்பட்டார். மொழிச் சண்டை யால் விளையும் பலனை அவர் முன்கூட்டியே எதிர் பார்த்துவிட்டார். அவர் கூறியது 1940-க்கு முன். அதற்குப் பிறகு இந்தி-உருது என்ற சண்டை போய், இந்தியா-பாக்கிஸ்தான் என்ற பிரிவினைப் பேச்சு அரசியல் வட்டாரத்தை ஆட்டிவைத்தது. இறுதியாக இந்திய துணைக்கண்டம் இரண்டாகத் துண்டிக்கப்படவேண்டிய அவசியத்திற்கு வந்து சேர்ந்தது.தசீர் குறிப்பிட்ட தமிழ் - இந்தி போராட் டம் இன்னும் முடியவில்லை. ஆனால் அவரடைந்த பயம் எந்த விதத்திலும் குறையவில்லை.

அப்துல் ஹக் சர்டேஜ் பகதூர் சாப்ரூ, தசீர் போன்ற வர்களிடமிருந்து, தென்னாட்டின் உண்மை நிலைக் குப் பரிந்து கண்டனங்கள் எழுந்ததைத் தவிர, ஜவஹர்லாலுக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தைத் தவிர, மற்ற எவரும் தென்னாட்டைப்பற்றிச் சிறிதும் கவ லைப்படவில்லை. வடநாட்டில் ஏற்பட்ட மொழிச் சண்டையை முதன்மையாக வைத்துக்கொண்டு, வட இந்திய மொழிகளின் வரலாற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டு போட்டியிட்ட இரு வட இந்திய மொழிகளைச் சமாதானப்படுத்த, வட இந்தியரால்,