உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மொழிப் போராட்டம்

வட இந்தியாவுக்காக, வட இந்தியாவில் விவாதிக் கப்பட்டதே இந்திய மொழிப்பிரச்சினையாகும்.

தென்னாட்டில் முக்கிய மொழிகளாக விளங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் திராவிடக் குழுவைச் சேர்ந்த மொழிகளாக மொழிநூலறிஞர்கள் கணக்கிட்டிருக் கின்றனர். இவ்வைந்து மொழிகளிலே தமிழ் முதிர்ந்த மொழியென்றும், திராவிடக் குழுமொழி யின் மூல மொழியிலிருந்து நேரிடையே வளர்ந்து வரும் மொழியென்றும், இதன் தோற்றம் கடல் கொண்ட லெமூரியா கண்டத்திலாகுமென்றும், இது தென்னாட்டிற்கே சொந்தமான பிறப்பிட மொழியென்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் அறுதி யிட்டுக் கூறியிருக்கிறார்கள்:

து

கி.மு. ஐந்து அல்லது ஆறாவது நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தென்னாட்டில் சமஸ்கிருத சொல் வழக்கு சிறிது சிறிதாக நுழைய ஆரம்பித்தது. வடநாட்டில் தோன்றிய வைதீக-பௌத்த-ஜைன மதங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தென்னாட் டில் நுழைய ஆரம்பிக்கவே சமஸ்கிருதமும் உடன் நுழைய ஆரம்பித்தது. வைதீக மதத்தைப் பரப்பிய ஆரியப்பார்ப்பனர்கள் சூழ்ச்சி முறையால் தென் னாட்டில் இடந்தேடிக்கொண்டு மக்களின் ஆதர வைப்பெற்றவுடன், சமஸ்கிருதத்தை எவ்வெவ் வழி களிலெல்லாம் ஆட்சிபெறச் செய்யமுடியுமோ அவ் வவ் வழிகளிலெல்லாம்புகுத்தி சமஸ்கிருதச் சொற் களைத் தமிழோடு நன்கு கலக்கும்படிச் செய்தனர். இந்த முயற்சி ஆரியமதப் புரோகிதர்களாலும், இதிகாசக்காரர்களாலும் அரசர்களின் ஆதரவைப் பெற்று எளிதில் செய்யப்படமுடிந்தது. சமஸ்கிருதம் தமிழோடு அளவுக்குமீறி சேர்ந்ததால் பிறந்த மொழிகள் தாம் தெலுங்கு, கன்னடம், மலை யாளம் போன்ற மொழிகளாகும். இப்பொழுதும்

புராண