உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மொழிப் போராட்டம்

தாகவே இருந்துவருகிறது. வடநாடு-தென்னாடு வேறுபாடு, சற்று ஆழ்ந்து கூற வேண்டுமானால், முரண்பாடு, இயற்கையாகவே அமைந்துவிட்டது. இந்த வேறுபாட்டைச் சிந்திக்க மறுத்துச் செய்யும் முயற்சி எதுவும் உருப்பெறாது-பயன்படாது; மாறாகப் பகைமையையே வளர்க்கும்-போர்க் களங்களைத்தான் காணச்செய்யும்.

எண்ண

இந்த அடிப்படை உண்மையை மறுத்தோ, மறந்தோ வட நாட்டவரால் மொழித் திட்டம் வகுக்கப்படுகிறது. அதன் முடிவை வட இந்திய மொழிகளினும் சிறப்புடைய-பண்பட்ட- பழந்திராவிட மொழிகளிடம், தனிப்பட்ட வரலா றும், கலாச்சாரமும்,பழக்க வழக்கமும்,நாகரிகமும் கொண்ட மக்களிடை, குறிப்பாகத் தமிழர்களிடை, தமிழ் மக்களின் விருப்பத்தைக் கேட்காமல், தமி ழறிஞர்களின் ஆதரவைப் பெறாமல், தமிழ் அர சியல் வாதிகள் அனைவரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் அடக்குமுறையின் உதவியால், ஆணவ எண்ணத்தின்பேரில் திணிக்க விரும்புவது அடாது; கூடாது; முடியாத செயல்.

பொதுமொழி தேவை என்பதற்கு அவர்கள் கூறியவற்றில் இருந்த குழப்பத்தையும், பொது மொழி தேடும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தையும் விளக்கினோம். இனி அவர்கள் கூறிய காரணங் கள் சரியானவை தாமா என்பதை உய்த்துணர்

வோம்.

ஒரே அரசியல் மொழியா?

பொதுமொழி தேவை என்பதற்கு இந்தி ஆத ரிப்பாளர்கள் கூறிய காரணங்கள்: ஒன்று, விடு தலைப் போராட்டத்தில் மக்களனைவரையும் ஒன்று படுத்த ஒரு தேசியமொழி தேவை என்பதும்