உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே அரசியல் மொழியா?

65

இரண்டாவது நாடு விடுதலையடைந்ததும் சுதந்திர நாட்டு அரசியல் விவகாரத்துக்கு அதுவே பொது மொழியாக வேண்டும் என்பதுமாகும்.

இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணம் இன்று அழிந்துவிட்டது. தேசியமொழி ஒன்று ந்தியாவெங்கும் பொதுமொழியாவதற்கு முன்பே, பலதிறப்பட்ட மொழிகள் வழங்குங் காலத்திலேயே தேசியமல்லாத அந்நிய மொழியின் உதவியின் பேரிலேயே இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட் டாகிவிட்டது; வெள்ளையதிகாரம் வெளியேறி விட் டது. வேண்டிய சுதந்திரம் மொழியின்றியே வந்து விட்டது. எனவே அக்காரணம்பற்றி இனிப்பொது மொழி தேவையில்லை.

விடுதலை கிடைத்த பிறகு, இரண்டாவது கார ணந்தான் அதிகமாகக் காட்டப்படுகிறது. அரசியல் அலுவல்களுக்காகத் தேசியப் பொதுமொழியைக் கட்டாயமாக எல்லோரும் கற்கவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லப்படுகிறது.

ஒன்றுபட்ட அரசியலமைப்பின் கீழ் பலமொழி வழங்கும் மக்கட் பகுதிகளும் வாழவேண்டும் என்ற அவசியத்திற்காக, ஒரே மொழிதான் அரசியல் மொழியாக வேண்டும் என்ற நியதி கிடையாது. பல் வேறு மொழியின் நாடுகளைக் கொண்ட இந்தியா ஒரே ஆட்சிமுறையோடு இருக்க விரும்புகிறது என்று வைத்துக்கொண்டாலும், அரசியல்மொழி ஒன்றாகத்தான் எங்கணும் நிலவ வேண்டும் என் ற அவசியமுமில்லை..

எடுத்துக்காட்டாக ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடு சுவிட்ஜர்லாந்து, அந்த நாட்டின் மக்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். அங்கு நான்கு மொழிகள் சரி சமமாக அரசியல் மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அரசியல் அலுவல் எதுவும் தடைப்பட்டு விடுவதாக அறியக்

5