பக்கம்:மொழியின் வழியே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மொழியின் வழியே!

பெருமிதச் சுவை அச்சத்திற்கும் வெகுளிக்கும் இடையே வைக்கப்பட்டது. வீரம் முதலியன பெருமிதம் காரணமாக மாற்றார்க்கும் தோன்றலானும், பின் நிற்கும் உவகையோடு வேறுபடுதலானும் வெகுளிச்சுவை பெருமிதத்திற்கும் உவகைக்கும் இடையே உரைக்கப்பட்டது. இனிப் பெருமிதம் உடையார்க்குத் தோன்றாதென்பது தோன்றவும் உவகைக்கு மறுதலை என்பதும் உவகையின் வழிப் பிறப்பது என்பதும் விளங்கவும் இங்ங்னம் இடை வைத்தார் எனினும் அஃது ஒருவாறு அமையும். மெய்ப்பாடு எல்லாவற்றுள்ளும் நகையைப் போலப் புலப்படுதற்கண் விளக்கமுடைமை பற்றியும் நகையோடு பேரியைபுடைமைபற்றியும், முன்னின்ற வெகுளிக்குச் சிறிதும் இயைபின்மைபற்றியும், வெகுளியில் வழித் தோன்றுவதென்பதுபற்றியும், உவகையிற் பிறக்கும் நகையையும் தன்னுட்படுத்தும் சிறப்புடைமை பற்றியும் உவகை இறுதியில் வைத்துக் கூறப்பட்டது. இவை சுவை வைப்பு முறைக்கு விளக்கம். -

இனி ஒன்பதாவதாக ஏனையோர் வேண்டுவதும் நாடக நிலையுள் ஒன்றெனக் கொள்ளப்படுவதுமாகிய சமனிலைச் சுவைக்கு ஏனைச் சுவைகளுக்குள்ளதுபோல, மெய்யின் கண் நிகழும் சத்துவ வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல் காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னுங் கருத்துப் பேரா சிரியருக்கு இருந்ததாகத் தெரிகிறது. 'மற்றிவ் வெட்ட னொடுஞ் சமனிலை கூட்டிச் சுவை ஒன்பதென்னாமோ நாடக நூலுட் போலவெனின் அதற்கு ஒர் விகாரமின்மையான் ஈண்டுக் கூறியது. இலன் என்பது என்றார் பேராசிரியர். ஏனைச் சுவைகளைப் போலன்றி அமைதியே சமனிலைச் சுவைக்கு மெய்ப்பாடாகலான் விகாரமின்மையாகிய அமைதியே அதற்குரிய விகாரமாகிய சத்துவ வேறு பாடெனப்படும். என்னை? ஏனையனபோல இயல்பால் நிகழுஞ் சத்துவங்களை நிகழாவண்ணங் காத்தொழுகும்