பக்கம்:மொழியின் வழியே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 11

வேறு நூல் செய்து மெனும்

மேற் கோளி லென்பதற்கும் கூறு பழஞ் சூத்திரத்தின் கோள்'

(நன்னூல்)

என்று, மரபையும் ஆன்றோர் இலக்கண இலக்கிய வழக்கையும் போற்ற வேண்டுமென்று தன்நூலைக்கற்போருக்குக்கட்டளை யிட்டுரைக்கின்ற முறைமையுடையவனாக ஒவ்வொரு தமிழ் இலக்கண ஆசிரியனும் இருப்பானாகில், அந்த மொழியினது பண்பாடும் தூய்மையும் விள்ளாமலே விளங்குவனவாம்.

இனி உறுதிப் பொருளைத் தொகுத்துக் கதை வடிவில் விவரிக்கும், காப்பியங்கள், அற நூல்கள், தனி இலக்கியங்கள் முதலிய இவைகள் மலிந்து விளங்குவதும் பண்பட்ட மொழி என்பதற்குச் சான்றாகும். கணக்கு, தொகை, பாட்டு, காவியம் என முறையுணர்ந்து நூல்களைத் தொகுத்துப் பிரித்த திறனும் ஒருவாறு பண்பாட்டையே சுட்டி நிற்கின்றது. பழையன கழிதல், புதியன புகுதல், என்ற காலகதிக்கு ஏற்ப மொழியின் வளர்ச்சி தடைப்படாமலிருக்குமாறு காப்பாற்றிக் கொண்டு, வருமுன்னர்க் காக்கும் இலக்கண வழக்குரிமையும் இதையே வற்புறுத்துகின்றது. சொற்களின் பரப்பைக் (Strength of Words) கொண்டு மொழியின் வளர்ச்சியையும் பண்பாட்டையும் ஆராயலாம் என்று மேலைநாட்டு மொழியியல் நூலார் (Phylologists) கருதுவர். அவ்வாறு ஆராய்ந்தாலும் தமிழ் மொழியின்பண்பாடுதலைசிறந்த ஒன்றாகவே விளங்குகின்றது.

"வானம் அளந்த

தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/13&oldid=621358" இலிருந்து மீள்விக்கப்பட்டது